பக்கம்:கம்பன் கலை.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 ) கம்பன் கலை வில்லறம் துறத்தல் முதலியவை பொருளற்றவையாகக் காட்சி தருகின்றன. பகை-நட்பு, சாவு-வாழ்வு என்பவை சிறியனவாக ஆகிவிட்டமையின் அவற்றை விட்டுவிட்டுத் தன் அகமுகப் பார்வையை எதிரே நிற்பவன் மேல் செலுத்துகிறான். அவ்வகமுகப் பார்வையில் தசரத குமாரன் என்ற மனிதன் தெரியவில்லை. அவன் கண்டதை இதோ கூறுகிறான்: அறிவு தந்தமையால் இக்காட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டதை உணர்ந்த வாலி இப்புதிய காட்சியில் கண்டவற்றையும் உடன் கூறுகிறான். மூவர் நீ! முதல்வன் நீ! மற்றும் நீ! பாவம் நீ! தருமம் நீ! பகையும் நீ! உறவும் நீ! (127) பாவமும்-தருமமும் ஒருவனேயாகக் காட்சி யளிப்பதை விளக்கம் பெற்ற வாலி உணர்கிறான். விளக்கம் பெறாதபொழுது பகை என்றும் உறவு என்றும் இருவேறு தனிப் பண்புகளாக இருந்தவை இப்பொழுது ஒன்றாகக் காட்சியளிக்கின்றன. ஒன்றாக உள்ள பொருளைப் பிரித்துப் பகை என்றும் உறவு என்றும் கூறுவது அறிவுடைமை யாகாது. எனவே, பொருளில் பகையோ உறவோ இல்லை. அவை அதனை உணர்கின்றவன் உணர்ச்சி அளவில் மாறுபடுகின்றனவே தவிர வேறு இல்லை. ஒரு சிலர் தொடக்கூட முடியாத சூடு என்பதை ஒரு சிலர் சாதாரணமாகக் குடிக்கக் காண்கிறோம். ஒரே பொருளினிடத்துப் பகை நட்பு என்ற இரு பண்புகள் எவ்வாறு உறையமுடியும் என்று ஐயுறுவார்க்கு அது இயலும் என்பதை அறிவுறுத்த வாலி ஒர் உவமை கூறுகிறான் அடுத்த பாடலில்: - "யாவரும் எவையுமாய், இருதுவும் பயனும் ஆய் பூவும் நல்வெறியும் ஒத்து, ஒருவ அரும் பொதுமையாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/141&oldid=770653" இலிருந்து மீள்விக்கப்பட்டது