பக்கம்:கம்பன் கலை.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 ) கம்பன் கலை அதில் வேறுபாடு எதுவும் தோன்றவோ தெரியவோ இல்லை. வாலியினுடைய இந்த மனமாற்றமும் (அவன் இறுதியாகப் பேசிய பேச்சும்) இராமனைத் திடுக்கிடச் செய்கிறது. அவன் இதனைச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அனுமன் கூற்று, சுக்கிரீவன் சொற்கள், வாலி தம்பி மனைவியைக் கவர்ந்த செயல் ஆகியவற்றைக் கொண்டே இராமன் வாலியை இதுவரை எடைபோட்டு அவன் தண்டிக்கப்பட வேண்டியவன் என்ற முடிவுக்கு வந்து விட்டிருந்தான். வாலியின் ஏசலில் 'குரங்குகளாகிய எங்கட்குத் தம்பி மனைவி தாய்க்குச் சமம் என்ற நியதி இல்லை; அது மனிதர்களாகிய உங்களுடைய சட்டம்' என்று கூறிய பொழுது இராமன் தன் மனத்தில் கொண்டிருந்த உறுதி ஆட்டங் கண்டது. இந்த ஒரு செயலை விட்டுவிட்டால், வாலியைப் பற்றி அவன் அறிந்திருந்த பண்புகள் அனைத்தும் வாலியின் பகைவர்களாகிய அனுமனும் சுக்ரீவனும் கூறியவையேயாகும். வாலியினுடைய மனமாற்றம் இராமனை வியப்படையச் செய்கிறது. மனம் மாறிய வாலி பேசிய சொற்கள் இராமன் மனத்தில் பச்சாதாபத்தை உண்டாக்குகின்றன. இதனை அடுத்து வாலி தம்பியையும், தனயன் அங்கதனையும் விளித்துப் பேசிய சொற்களைக் கேட்ட இராமன் அசந்து போய்விட்டான்! இறுதியாகத் தம்பியாகிய சுக்ரீவனைப் பற்றி இராமனிடம் வாலி கூறும் சொற்கள் இராமன் மனநிலையை முற்றிலும் மாற்றி விடுகின்றன. - 'ஒவியஉருவ! நாயேன் உளது ஒன்று பெறுவது உன்பால் பூஇயல் நறவம் மாந்தி, புந்திவேறு உற்றபோழ்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/143&oldid=1507345" இலிருந்து மீள்விக்கப்பட்டது