பக்கம்:கம்பன் கலை.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாலி-ஒரு புதிய கண்ணோட்டம் 9 133 தீவினை இயற்றுமேனும்; எம்பிமேல் சிறி, என்மேல் ஏவிய பகழி என்னும் கூற்றினை ஏவல் என்றான். "நல்வாழ்வு வாழ்ந்து, அறியாமல் குடிப்பதிலேயே பொழுதைக் கழிப்பவன் என் தம்பி, அத்தகைய மன நிலையில் அவன் தீமை புரிவான் இது உண்மை என்பது அடுத்த கார்காலப் படலத்திலேயே விளக்கப்படுகிறது) என்றாலும் அந்நிலையினும் நீ மனம் வெறுத்து என்மேல் ஏவிய அம்பாகிய கூற்றை அவன் மேல் ஏவிவிடாதே! இதனை ஒரு வரமாக எனக்கு அருள்க’ என்று தன்னைக் கொன்ற இராமனிடம் தன்னைக் கொல்வித்த சுக்ரீவனைக் காக்க வேண்டும் என்று வரம் வேண்டும் வாலி ஸ்திதப் பிரஞ்ளு மனநிலை பெற்றுவிட்ட மகாத்மாவாக ஆகி விட்டான் என்பதை இராமன் அறிய முடிகிறது. ஒருவேளை வாலியின் இப்பண்பாட்டை இராமன் முன்னரே அறிய நேரிட்டிருப்பின் வேறுவிதமாக நடந்து கொண்டிருக்கவும் கூடும். ஆனால் இப்பொழுது காரியம் மிஞ்சிவிட்டது. வாலியை ஒருவேளை பிழைக்கச் செய்ய இராமனுக்கு முடியும். எனினும் அதனால் விளையும் பயன் ஒன்றும் இல்லை. சாவு, வாழ்வு என்ற இரண்டின் வேறுபாட்டைச் சட்டை செய்யும் மன நிலை வாலியிடம் இல்லை. வாழவேண்டும் என்று அவன் விரும்பவுமில்லை. எனவே இராமன் செய்யத்தக்கது ஒன்றும் இல்லை. பச்சாதாபத்துடன் என்ன செய்யலாம் என்று இராமன் குழப்பமடைந்துள்ள நிலையில் அவன் சற்றும் எதிர்பாராத செயல் ஒன்றை வாலி செய்து விடுகிறான். இராமனை நோக்கிப் "பொய் உடை நெஞ்சினார்க்குப் புலப்படாத பொருளே! என் மைந்தன் உன் அடைக்கலம்” என்று கூறும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/144&oldid=770656" இலிருந்து மீள்விக்கப்பட்டது