பக்கம்:கம்பன் கலை.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 ல் கம்பன் கலை முறையில் அங்கதனை இராமனிடம் அடைக்கலமாகத் தந்துவிடுகிறான். - 'பொய் அடை உள்ளத்தார்க்குப் புலப்படாப் புலவ! மற்று உன் கையடை ஆகும்' என்ன... (156) இச்செயலைச் சற்றும் எதிர்பாராத இராகவன் விதிர்விதிர்ப் பெய்தி இருக்க வேண்டும். அவன் செய்த செயல் இவ்வாறு தான் நடந்திருக்க வேண்டும் என்று எண்ணத் துண்டுகிறது. வாலி, "என் மைந்தன் உன் அடைக்கலம் என்று கூறியவுடன் அங்கதன் இராமன் திருவடிகளில் வீழ்ந்தான். தாமரைத் தடங்கண்களை யுடையவனாகிய இராகவன் உடனே தன் உடைவாளை அங்கதனிடம் நீட்டினான். வாய் பேசாமல் நீட்டி இருந்தாலே நீ இதனை வாங்கிக் கொள் என்ற கருத்தை அனைவரும் அறிய முடியும். ஆனால் இராமன் வாளை நீட்டியதுடன் நீ இது பொறுத்தி என்று கூறினானாம். 'தன் அடி தாழ்தலோடும், - தாமரைத தடங்கணணானும பொன் உடைவாளை நீட்டி நீ இது பொறுத்தி என்றான் என்னவும், உலகம் ஏழும் ஏத்தின; இறந்த வாலி அந்நிலை துறந்து வானுக்கு அப்புறத்து உலகன் ஆனான்' (157) நீ இது பொறுத்தி என்பதற்கு வாளை வாங்கிக் கொள் என்று பலரும் பொருள் கூறுவர். ஆனால் முன்னரே 'தீயன பொறுத்தி (125 என்று வாலி கூறுவதால் பொறுத்தி என்ற சொல்லை மன்னித்துக்கொள் என்ற பொருளில்தான் கவிஞன் பயன்படுத்துகிறான் என்பதை அறிய முடிகின்றது. வாலியைத் தான் கொன்றது சரியா ள்ன்ற வினாவில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/145&oldid=770657" இலிருந்து மீள்விக்கப்பட்டது