பக்கம்:கம்பன் கலை.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 'கம்பன்-வழக்கறிஞன் ஒரு புகழ் பெற்ற வழக்கறிஞரைப் பற்றி ஒரு கதை சொல்வதுண்டு. ஒரு சமயம் அவ்வழக்கறிஞர் தாம் மேற்கொண்ட கட்சி எது என்பதை மறந்து எதிர்க்கட்சியாளருக்குப் பயன்படக்கூடிய வாதங்களை மிக விரிவாகவும் அழகாகவும் எடுத்துப் பேசினாராம். நீதிபதி உட்பட அனைவரும் அப்படியே அசந்து விட்டனர். ஒரு கணம் தம் உதவியாளரிடம் அவ்வழக்கறிஞர் திரும்பிய பொழுது, உதவியாளர் அவருடைய பெருந் தவற்றை எடுத்துக் கூறினாராம். ஒரு சிறிதும் மனந்தளராத அவ் வழக்கறிஞர் நீதிபதியிடம் திரும்பிப் 'பிரபுவே! இப்படியெல்லாம் எதிர்க்கட்சி வக்கீல் கூறக்கூடும். இவை அனைத்திற்கும் இதோ விடை அளிக்கின்றேன்” என்று தொடங்கி அழகாகத் தம் கட்சிக்கு வெற்றி பெற்றுத் தந்தாராம். சிறந்த வழக்கறிஞனுக்கு வேண்டிய அனைத்து வன்மைகளும் கம்பனிடம் நிறைந்து காணப்படுகின்றன. தன் கட்சிக்கு வேண்டிய எல்லாச் சாதனங்களும் நிறைந்துள்ள பொழுது வழக்கை வெல்வது அனைவருக்கும் எளிமையாக முடியும். ஆனால் எதிரியின் வாதங்களைத் தனக்குச் சாதகமாகத் திருப்பக் கூடியவனே சிறந்த வழக்கறிஞன். கலைஞருள் சிறந்தவனாகிய கம்பனிடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/147&oldid=770659" இலிருந்து மீள்விக்கப்பட்டது