பக்கம்:கம்பன் கலை.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'கம்பன்-வழக்கறிஞன் 137 இத்தகைய வாதத்திறமையும் அளவற்று இருத்தலைக் காணலாம். இங்கு வழக்கில் புலவன் நேரடியாக ஈடுபடவில்லை. அதைவிடச் சிறந்த முறை அவன் படைத்த பாத்திரங்களைச் சாட விடுவதாகும். அவை பேசும் பேச்சுக்கள் அனைத்தும் அவனுடைய பேச்சுக்களே பல்லவா? அவனது காப்பியத் தலைவனாகிய இராமனைப் பல கோணங்களில் காட்சி தருமாறு செய்கிறான் புலவன். நாம் இங்குக் காணப்போவதும், அரசியல் தந்திரியாகிய இராமனை யாகும். அரசியல் தந்திரம் என்று கேட்டவுடன் நம்மில் பலருக்குக் கசப்புத் தட்டுதல் கூடும். இன்றைய சூழ்நிலையில் இவ்விரண்டு சொற்களும் தவறான எண்ணங்களை நம் மனத்தில் துண்டுவதை அடிப்படை யாகக் கொண்டு கம்பனைக் குறை கூறுதல் கூடாது. இன்றுள்ள சூழ்நிலையையும் அரசியலையும் மறந்து சற்றுக், காப்பியத்தில் உலாவ வேண்டும். இராவணன்மேல் போர் தொடுக்கும் கருத்துடன், தன் வானரப் படையுடன் ஒரு சோலையில் வந்து தங்கியுள்ளான் இராகவன். போர் என்று தொடங்கி விட்டால், பிறகு அதற்கு உதவியான அனைத்துச் சாதனங்களையும் தேடுவதுதானே அறிவுடைமை. இந்நிலையில் வீடணன் 'இராகவா சரணம்” என்று கூவிக்கொண்டு வந்து, பாசறையின் புறக்காவல் உள்ள இடத்து நிற்கிறான். வாணர வீரர் அன்ைவரும் அவனைக் கொன்றுவிட வேண்டுமென்று ஆர்ப்பரிக்கின்றனர். ஆனால், ஒற்றர் படையினரான மயிந்தன், துமிந்தன்' என்ற இருவரும் அவன் யாரென வினவிப் பின்னர் உள்ளே சென்று இராமனிடம் அவன் வரவைத் தெரிவிக்கின்றனர். பெரியதொரு முடிபைச் செய்ய வேண்டிய இடமாகும் இது. இராகவன் தானாக இதில் ஒரு முடிபுக்கு வர விரும்பவில்லை. உற்ற துணைவர்களைச் சூழ்ந்துதான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/148&oldid=770660" இலிருந்து மீள்விக்கப்பட்டது