பக்கம்:கம்பன் கலை.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'கம்பன்-வழக்கறிஞன் 139 துணையாகக் கோடல் நம் வலிமையில் பிறரை ஐயங் கொள்ளவன்றோ செய்யும்! இவனை அடுத்துப் பேசிய பெருமை மிக்கவன், அலகில் கேள்வியால் தன்னிகர் பிறிதிலாத் தகைய சாம்பன் என்பவனாவான். சுக்கிரீவனைவிடக் கல்வியிற் பெரிய சாம்பன் வாதம் அழகாக உள்ளது. சிற்றினத்து) அவரொடும் செறிதல் சீரிதோ? சரணம் என்று நாம் ஏற்றுக் கொண்ட பின்னர், இவன் சாதித் தொழிலைக் காட்டினால் என் செய்வது? அப்பொழுது இவனை விட்டு வைப்பதும் தவறு, கொன்றாலும் அடைக்கலத்தைக் கொன்ற பழி நம்பால் சாரும். இதற்கடுத்துப் பேசுபவன் பால்வரும் பனுவலின் துணிபுபற்றிய சால்பெருங் கேள்வி மிக்க நீலன் எனும் சேனைக் கள்வலனாவான். எத்தகைய பகைவரைச் சேர்த்துக் கொள்ளலாம் என்பதைப்பற்றி விரிவாகக் கூறி நீலன் இறுதியில், - 'காலமே நோக்கினும் கற்ற நூல்களின் மூலமே நோக்கினும் முனிந்து போந்தவன் சீலமே நோக்கியாம் தெளிந்து தேறுதற்கு) ஏலுமே என்றெடுத் து) இனைய கூறினான்.' (வீடணன் அடைக்கலப் படலம், 84) மேலும், மற்றுள மந்திரிக் கிழவர், வாய்மையால் குற்றமில் கேள்வியர் அன்பு கூர்ந்தவர் அனைவரும் கூடி, பற்றுதல் பழுது எனப் பழுதுறா ஒரு பெற்றியின் உணர்வினார் முடியப் பேசினார். - இவ்வனைவர் வாதங்களையும் ஒன்று சேர்த்துப் பார்த்தால் மூன்று சிறந்த கருத்துக்களை மூவரும் பேசி இருத்தல் புலனாகும். முதலாவது, வீடணன் புறப்பட்டு வந்த காலம் சரியானது அன்று என்பது; இரண்டாவது, அரக்கர்களில் ஒருவன்மட்டும் நல்லவன் என்று கூறுவது பொருத்தமில்லை என்பது; மூன்றாவது, வந்தவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/150&oldid=770663" இலிருந்து மீள்விக்கப்பட்டது