'கம்பன்-வழக்கறிஞன் 141 இல்லை என்பது பின்னர் விளங்குகிறது, இந்திரசித்தனை அழித்து மீண்ட இலக்குவனைத் தழுவிக் கொண்டு இராகவன் கூறும் சொற்கள், 'ஆடவர் திலக நின்னால் அன்று, இகல் அனுமன் என்னும் சேடலனால் அன்று, வேறோர் தெய்வத்தின் சிறப்பும் அன்று, வீடணன் தந்தவெற்றி ஈது. (இந்திரசித்து வதைப்படலம், 71) என்பவை ஆதலின் சுக்கிரீவன் எவ்வளவு ஆழச் சிந்திக்கிறவன் என்பதும் புலனாகிறது. இங்ங்ணம் எல்லோரும் சேர்ந்து வீடணன் வேண்டா என்று கூக்குரல் கிளப்பியதை இராமன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இனி, அவனுக்கு உள்ளது ஒரே ஒரு நபர்தான். மற்றையோரை யெல்லாம் கருத்தென்ன கூறுங்கள் என்று வாயால் கேட்ட இராமன், நெறிதரு மாருதி என்னும் நேரிலா அறிவனைக் கருத்து என் செப்பு என நோக்கினானாம் அனுமன் என்ற அச்சொல்லின் செல்வன் அழகான முகவுரையுடன் இராமனுடைய உதவிக்கு வந்து சேர்கிறான். வீடணன் தவறான கருத்துடன் வரவில்லை என்று கூறுகிறான் மாருதி. எவ்வாறு? 'உள்ளத்தின் உள்ளதை உரையின் முந்துற மெள்ளத்தம் முகங்களே விளம்பு மாகலான்' இவன் வஞ்சக எண்ணத்தோடு வரவில்லை என்பதே அவன் வாதம். ஆனால், இவர்களில் ஒருவரும் இன்னும் வீடணன் முகத்தைக் காணவில்லை என்பதும் அறிந்து கொள்ளல் வேண்டும். இலங்கையில் கண்டிருப்பான் மாருதி என்றால், அது இங்கு அவனுடைய வாதத்திற்குப் பொருந்தாமை எளிதின் விளங்கும். மற்றையோர்கள் அனைவரும் கூடி வீடணன் வந்து சேர்ந்த காலம் தவறானது என்று கூறினார்கள் அல்லவா? அது ஒன்றுக்குத்தான் மாருதி மிகுதியாய காரணங்காட்டி விடை
பக்கம்:கம்பன் கலை.pdf/152
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை