பக்கம்:கம்பன் கலை.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 ல் கம்பன் கலை என்றமையால், தன் மகிழ்ச்சியின் எல்லையின் நின்று பேர் அறிவாள! நன்று, நன்று! என்று கூறினான் என்றும் அறிகிறோம். இனி இம்மட்டோடு இராமன் நின்று விடுவானேயாகில் பயன் ஒன்றுமில்லை. மாருதி வார்த்தையில் இராமன் மகிழ்ந்ததுபோல் ஏனையோர் மகிழ்ந்ததாகத் தெரியவில்லை. அவர்களை மகிழ்விக்கும் பொறுப்பு அவனைச் சேர்ந்ததாகும். எனவே, ஏனையோரை நோக்கி, இவ்வார்த்தைகள் சிறந்தன! தெளியுங்கள்!' என்று கூறினான். தெளிவுற எங்ங்ணம் தேறுவது? அதற்குரிய வழி ஒன்றுதான்! அவர்கள் ஐயங்களைப் போக்குவதுதான் அவ்வழி. ஆனால், அவ்வழியை மேற்கொண்டால் நேரும் இடுக்கண் இராகவன் அறியாததன்று. அவ்வழியை விட்டுவிட்டு வேறு வழி மேற்கொள்கிறான் இராமன், மீண்டும் அவன் வந்து சேர்ந்த காலம் செம்மையானது என்பதை நினைவு மூட்டுகின்றான். பின்னர் கெட்ட எண்ணத்துடன் வீடணன் வரவில்லை; அண்ணன் அரசின் மேல் வைத்த ஆசையே இவண் வருமாறு அவனைத் தூண்டிற்று என்றும் கூறுகின்றான். சிறியவர் தொடர்பு தீங்கை பயக்கும் என்ற நீலன் தடைக்கு விடையாக, அறிவினுக்கு அவதியில்லை என்றும் கூறுகிறான். ஆனால், ஒரு வியப்பு என்னவெனில், இவ்வளவு பேருக்கும் அவன் விடைதரும் பாடல் ஒன்றுதான் என்பதே. மீதம் உள்ள் பன்னிரண்டு பாடல்களிலும் அடைக்கலம் காத்தலின் பெருமை, இன்றியமையாமை முதலியனவும், இறைவன் முதல் ஜடாயுவரை உள்ளவர்கள் அடைக்கலம் என்று வந்தவரைக் காத்த பெருமையுமே பேசப்படுகிறது. இத்துணை நேரம் அவன் பேசும் பொருளிலும் வகையிலும் சுக்கிரீவன் முதலாயினோர் கருத்தைப் பறிகொடுத்து நிற்கின்றனர். இவ்வளவு நீண்ட சொற்பொழிவைச் சிறந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/157&oldid=770670" இலிருந்து மீள்விக்கப்பட்டது