பக்கம்:கம்பன் கலை.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 , கம்பன் கலை அறிவுடன் பண்பாடும் நிறையப் பெற்ற இராம இலக்குவர்களைக் காணலாம். இந்திரசித்தன் நிகும் பலையில் யாகம் செய்கிறான் என்பதை அறிந்தனர் சோதரர் இருவரும். எவ்வாறாயினும் அந்த யாகத்தை நிறுத்த வேண்டும். இலக்குவனைப் போருக்குத் தயார் செய்து அனுப்பும் இராமன், தம்பிக்குக் கூறும் அறிவுரை நமக்கு இப்பொழுது மிகவும் பயன்படும். இராமன் இலக்குவனைத் தழுவிக்கொண்டு, “ஐயனே, தாமரை மலரின்மேல் வாழும் நான்முகன் படையை அந்த இந்திரசித்தன் விட்டாலும் அதனை விலக்குவதற்காகக்கூட நீ நான்முகன் படையை விட்டுவிடாதே. அதை ஏவினால் தேவருலகமும் இந்த மண்ணுலகமும் அழிந்துவிடும்” என்று கூறுகிறான். தம்பியைத் தழுவி ஐயன் தாமரைத் தவிசின் மேலான். வெம்படை தொடுக்கு மாயின், விலக்குவான் பொருட்டால் . அந்த அம்புநீ துரப்பாய் அல்லை ! அனையது துரந்த காலை உம்பரும் உலகும் எல்லாம் விளியும்; அஃது ஒழிதி என்றான். பண்பாடும் கருணையும் உடைய இராமனுடைய இச் சொற்களை நாம் மிகுதியும் சிந்திக்க வேண்டும். பகைவன்மேல் முதலில் நீ பிரமாஸ்திரத்தைப் போடாதே' என்று கூறுவதே மிகவும் சிறந்த பண்பாடு. ஆனால், இராமன் அதைவிடப் Ll &J படிகள் மேலே சென்றுவிடுகிறான். 'அவன் முதலில் ஏவினாலும் அதனை விலக்குவதற்காகக்கூட நீ அந்த நான்முகன் படையை விடாதே. ஏன் எனின், உன்னைக் காத்துக் கொள்ளவேண்டி நீ அதை விட்டாலும், உலகம் அழிவுறும் என்று கூறுகிறான் கருணையின் நிலையமானவன். - ஹைட்ரஜன் குண்டை இன்று தயாரிப்பவர்களும் சோதனை செய்பவர்களும் யார் தெரியுமா? உலகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/165&oldid=770679" இலிருந்து மீள்விக்கப்பட்டது