பக்கம்:கம்பன் கலை.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு பாட்டுடையான் 161 யாருமே ஒருவர் கூறினார் என்பதற்காகத் தம் கடமையை விட்டுக் கொடுப்பதில்லை. இதை நன்றாக அறிந்த பரதன் இதோடு நிறுத்திவிட்டால் சத்துருக்கன் ஒருநாளும் இதற்கு உட்பட மாட்டான் என்பதை உணர்ந்து, ஓர் அறக்கட்டளையிடுகின்றான். தான் மன்னன் என்ற முறையிலும், அண்ணன் என்ற முறையிலும் சொல்லுகின்றவற்றை இளையவனும், குடிமக்களுள் ஒருவனுமாகிய சத்துருக்கன் தட்டக்கூடாது என்பதை நினைவுறுத்துவது போல "என் சொல்லை மறுக்கக் கூடா" தென ஆணையிடுகின்றான். என்றாலும் என்ன ? இதைக் கேட்டான் நான்காவது தம்பி. காதுகளைப் பொத்திக்கொண்டான். விஷத்தை உண்டவனைப் போலக் கண்ணும் மனமும் நடுங்கின. விம்மி அழுதான். ஆனால், இந்த உணர்ச்சிகள் எல்லாம் ஒருசில வினாடி நேரம்தான் நின்றதாகத் தெரிகிறது. இவற்றை யெல்லாம் வென்று, கோபமாகிய ஒர் உணர்ச்சி எல்லை மீறிக் கிளம்புகின்றது. அதனைக் கூறவந்த கவிஞன், கொழுந்துவிட்டு நிமிர்கின்ற கோபத்தான் என்று கூறுகிறான். எனவே, தன்னை மீறி வருகின்ற சினத்தால் ஆட்கொள்ளப்பட்ட இளையவன் அண்ணனை நோக்கி, "அழுந்து துன்பத்தினாய்! நான் உனக்கு என் பிழைத்து உளேன்?" என்று கேட்கிறான். இந்தக் கோப உணர்ச்சி ஓரளவு அதிக நேரம் இருந்து அதனோடு வெறுப்பு, நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம் ஆகிய எட்டுச் சுவைகளும் ஒன்றாகக் கலந்து ஒருங்கே காட்சியளிக்கின்ற ஒரே பாட்டில் பேசுகின்றான் அந்த அற்புதமான தம்பி; - 'கான்ஆள நிலமகளைக் கைவிட்டுப் போனானைக் காத்து, பின்பு போனானும் ஒருதம்பி, போனவன்தான் வரும்அவதி போயிற்று என்னா, 11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/172&oldid=770687" இலிருந்து மீள்விக்கப்பட்டது