பக்கம்:கம்பன் கலை.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு பாட்டுடையான் 163 பெருந்தேர்க்கு அச்சாணியாய் விளங்குகிறான் ஒரு பாட்டு உடையவனாகிய சத்துருக்கன். எனவே, ஏனைய பாத்திரங்களின் பல்வேறு உணர்ச்சி நிலைகளைப் பற்பல சந்தர்ப்பங்களில் பலப்பல பாடல்கள் மூலம் கவிஞன் நமக்கு அறிவிக்கின்றான். எனினும், நாலாவது தம்பியைப் பற்றி முழுவதும் அறிந்துகொள்ளுமாறு நாலே வரிகளில் கூறியுள்ளான் கம்பநாடன். சிறந்த கலைஞன் மிகச் சிறிய அளவிலும்கூட மிகப் பெரிய படைப்பைப் படைத்துக் காட்டக்கூடும் என்பதற்கு இஃது ஒர் எடுத்துக்காட்டு அன்றோ! -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/174&oldid=770689" இலிருந்து மீள்விக்கப்பட்டது