பக்கம்:கம்பன் கலை.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 கம்பன் கலை அவ்வாறு செய்பவர்களின் தமிழ் அறிவு ஐயத்திற் கிடமானதேயாகும். இந்தப் போலித் தமிழன்பர்கள் கருத்துப்படி அந்த வரிக்கும் பொருள் கூறத் தொடங்கினால் கண்ணகியின் பாடே ஆபத்தாகி விடும். கண்ணகி, கவுந்தி அடிகள், கோவலன் ஆகிய மூவரும் தங்கியுள்ள உறையூர்க் காட்டில் இவர்களைக் கண்ட பண்பாட்டிற் குறைந்த சிலர் அடிகளைப் பார்த்து, "மதனும் ரதியும் போல்வார். இவர் யாவர்?’ என்று கேட்டனராம். கண்ணகியைப் பார்த்து அவள் அழகில் ஈடுபட்டு இவள் யார்?' என்று துறவியைக் கேட்கும் அளவிற்கு அவர்கள் சென்றார்கள். அடிகள் இவர்கள் என் மக்கள் என்று கூறியவுடன் உடன் பிறந்தார் தம்முள் மணமுடித்துக் கொள்வது உண்டோ? என்றும் வாயாடத் தொடங்கினர் என்றால் என்ன பொருள்? கண்ணகியின் அழகு அவர்கள் மனத்தைப் பேதலிக்கச் செய்துவிட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது. நெறியின் நீங்கிய அக்கயவர்கள் நீரல கூறினால் இதில் கண்ணகியை எவ்வாறு சம்பந்தப்படுத்த முடியும் ? இதனால்தான் அந்த அடியின் உண்மையான பொருளை அறிந்துகொள்ள வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப் பெற்றது. இனிச் சீதையைப் பற்றியும் ஆராய வேண்டும். சீதையை இராவணன் சிறை எடுத்தது உண்மை. அவள் உடம்பைத் தொடாமல் இளையவன் அமைத்த பர்ன சாலையுடன் இராவணன் எடுத்துச் சென்று அசோக வனத்தில் சிறைவைத்தான் என்று அனுமன் பேசுகிறான்: "வேலையுள் இலங்கை என்னும் விரிநகர் ஒருசார் - . . . . விண்தோய் காலையும் மாலை தானும் இல்லதுஓர் கனகக் கற்பச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/197&oldid=770714" இலிருந்து மீள்விக்கப்பட்டது