பக்கம்:கம்பன் கலை.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராவணன் மனச்சிறையில் வைத்தது யாரை ? 191 உனக்காக எடுக்க முயன்ற போதுதான் அவர்கள் என்னை இவ்வாறு செய்தார்கள்" என்று கூறுமுகத்தால், 'அன்னவள் தன்னை நின்பால் உய்ப்பல் என்று எடுக்கலுற்ற என்னை அவ்விராமன் தம்பி இடைப் புகுந்து, இலங்கு வாளால் - முன்னை மூக்கு அரிந்து விட்டான்; முடிந்தது என்வாழ்வும் உன்னின் சொன்னபின், உயிரை நீப்பான் துணிந்தனன் என்னச் சொன்னாள்' (சூர். சூழ். 81) தனக்காக உதவி செய்யப் புகுந்த பொழுது அவள் அவமானப்பட்டாள் என்று கேட்கையில் ஆணவம் உடைய ஒருவன் எப்படியாவது பழிவாங்கவேண்டும் என்றுதானே நினைப்பான். இதனை அடுத்து இராவணன் மனநிலையில் தோன்றிய மாற்றங்களைக் கவிஞன் மூன்று பாடல்களில் படம் பிடித்துக் காட்டுகின்றான்: - 'கரனையும் மறந்தான்; தங்கை மூக்கினைக் கடிந்து - நின்றான் வரனையும் மறந்தான், உற்ற பழியையும் மறந்தான்; முன்னைப் பெற்ற பரணையும் மறந்தான்; கேட்ட நங்கையை மறந்திலாதான்' (சூர். சூழ். 83) இதனை அடுத்து என்ன நிகழ்கிறது தெரியுமா? 'மயிலுடைச் சாயலாளை வஞ்சியா முன்னம் நீண்ட . எயிலுடை இலங்கைநாதன், இதயமாம் சிறையில் வைத்தான்' - (சூர். சூழ். 84) இதில் உள்ள வேடிக்கையைக் கவிஞன் சுட்டிக் காட்ட விரும்புகிறான். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/202&oldid=770720" இலிருந்து மீள்விக்கப்பட்டது