பக்கம்:கம்பன் கலை.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 கம்பன் கலை முகிழ்த்து அவனை ஆட்டிப் படைத்த, சீதை என்று அவனால் பெயர் சூட்டிப் போற்றப்பட்ட ஓர் உருவத்தையேயாகும். உண்மைச் சீதையைச் சிறை எடுத்து வந்து அசோகவனத்தில் வைத்த பொழுதும் அவன் அவளைக் காணும்போதெல்லாம் தன் கற்பனைச் சீதையை அவள் மேல் ஏற்றியே கண்டான் என்பதும் விளங்கும். எனவே இராவணன் மனச் சிறையில் வைத்தது அவனுடைய கற்பனையில் உதித்த சீதையையே ஆகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/207&oldid=770725" இலிருந்து மீள்விக்கப்பட்டது