பக்கம்:கம்பன் கலை.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 தீக்குளித்தது ஏன்? 8 ம் பன் பாடியுள்ள இராம காதையில் ஆராய்ச்சிக்கும் கருத்து வேறுபாட்டுக்கும் இடம் அளிப்பவை இரண்டு நிகழ்ச்சிகளாகும். வாலி வதை ஒன்று; பிராட்டியை இராகவன் தீப்புக ஏவியது இரண்டு. இவற்றுள் இரண்டாவதைப் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். - - இராவணன் கொல்லப்பட்ட பிறகு இராமன் வீடணனை நோக்கி, "வீடண சென்று தா நம தேவியைச் சீரொடும்” (மீட்சி, 37) என ஏவினான். சீரொடும் என்று கூறியதன் உட்பொருளை அறியாத வீடணன், பிராட்டியை அலங்காரம் செய்து சக்கரவர்த்தித் திருமகனின் முன் அழைத்து வந்தான். எதிரே வந்து நிற்கும் கற்பினுக்கு அணியினை, வெண்மைக் காப்பினை, பொற்பினுக்கு அழகினை, புகழின் வாழ்க்கையை, தற்பிரிந்து அருள்புரி தருமம் போலிளங் கற்பின் அத்தலைவனும் அமைய நோக்கினான் (மீட்சி, 60) என்று கவிஞன் நமக்கு எடுத்துக் கூறுகிறான். இதில் கடைசி அடி ஆழ்ந்து நோக்கற்குரியது. 'கற்பின்' என்ற சொல்லுக்கு அன்பினால் என்பது பொருள். அமைய என்ற சொல் இங்கு வருவது சற்று வியப்பைத் தருகிறது. அமைய என்றால் பொருந்த என்று பொருள் தரும். இராமன் பிராட்டியைப் பொருந்த நோக்கினான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/208&oldid=770726" இலிருந்து மீள்விக்கப்பட்டது