பக்கம்:கம்பன் கலை.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 & கம்பன் கலை என்றால் என்ன பொருள்? இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண உதவும் இச்சொல்லின் ஆழத்தைப் பின்னர் காணலாம். ஒரு விநாடி அமைய நோக்கிய பின்னர் பணம் கிளர் அரவு என எழுந்து பார்ப்புறா (மீட்சி, 6) என்கிறான் கவிஞன். அதாவது படமெடுத்த பாம்பைப் போல பார்த்துச் சீறினானாம். அவன் வாய் திறந்து முதன்முதலாகக் கூறிய சொற்கள் கொடுமை நிறைந்தவை. யாரும் தாங்க இயலாதவை: 'ஊண் திறம் உவந்தனை, ஒழுக்கம் பாழ்பட மாண்டிலை; முறை திறம்பி அரக்கன் மாநகர் ஆண்டு உறைந்து அடங்கினை ...' 'மருந்தினும் இனிய மன்னுயிரின் வான்தசை அருந்தினையே, நறவு அமைய உண்டியே; 'பெண்மையும் பெருமையும் பிறப்பும் கற்பு எனும் திண்மையும், ஒழுக்கமும், தெளிவும் சீர்மையும் உண்மையும் நீளனும் ஒருத்தி தோன்றலால் வண்மைஇல் மன்னவன் புகழின் மாய்ந்தவால்' - (மீட்சி, 62, 64, 66) பிராட்டியை நோக்கி இராகவன் 'நீ புலால் உண்டாய்; ஒழுக்கம் கெட அறமற்ற அரக்கன் நகரில் வாழ்ந்தாய்; உயிர்களைக் கொன்று அவர்கள் தசைகளைத் தின்றாய்; கள்ளைக் குடித்தாய்;. நீ பிறந்த காரணத்தால் உலோப குணமுடைய மன்னவன் புகழ் அழிவது போல் பெண்மை, பெருமை, நற்குடிப் பிறப்பு, கற்பு, திண்மை என்பன அழிந்துவிட்டன" என்று கூறியதுடன் அமையாமல், "நான் என்ன கூற முடியும்? என் உள்ளம் துடிக்கிறது. எங்காவது சென்று செத்துப்போ அல்லது நீ சரியென்று நினைக்கும் வழியில் சென்று வாழ்ந்து போ” என்ற கருத்தில், * . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/209&oldid=770727" இலிருந்து மீள்விக்கப்பட்டது