பக்கம்:கம்பன் கலை.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீக்குளித்தது ஏன் ? 9 201 இவ்வாறு நினைத்துப் பார்த்தால் ஒர் உண்மை விளங்கியே தீரும். அறத்தின் மூர்த்தியாகிய இராகவன் ஒரு நாடகம் ஆடுகின்றான். வேண்டுமென்றேதான் இந்நாடகம் ஆடப்பெறுகிறது. ஊராருக்காக உலகத்தாருக்காக அன்று இந்த நாடகம். பிராட்டியின் பொருட்டுத்தான் இந்த நாடகம். பிராட்டிக்கு என்ன நேர்ந்து விட்டது என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? அவளுக்கு நேர்ந்த அவலத்தை அவளே அறிய மாட்டாள். இலங்கையில் இருந்த சில தினங்களுக்குள் அப்பெருமாட்டியின் மனத்தின் ஆழத்தில் ஒரு குற்ற உணர்வு (guilty Complex) புகுந்து விட்ட்து. இராவணன் தன்னைத் தூக்கி வருவதற்குத் தானே காரணமாய் அமைந்து விட்டதை அப்பெருமாட்டி தனியே அசோக வனத்தில் இருந்த காலத்தில் உணரத் தலைப்பட்டாள். இதனை உணரத் தலைப்பட்டவுடன் இருவகை அச்சம் அவளைப் பிடித்துக் கொண்டது. மாய மானின் குரல் கேட்டு, உடனே இலக்குவனை உதவிக்குச் செல்லுமாறு கட்டளையிட்டாள் பிராட்டி. அது கேட்டு வியப்புற்ற இலக்குவன். இராமனுக்குத் தீங்கு இழைக்க யாராலும் முடியாது என்று கூறிய இலக்குவன், "பார் எனப், புனல்என, பவன, வான், கனல் பேர் எனைத்து. அவை, அவன் முனியின் பேருமால் கார் எனக் கரிய அக்கமலக் கண்ணனை. யார் எனக் கருதி இவ் இடரின் ஆழ்கின்றீர் இரா. சூழ்ச்சி, 7, என்று கூறியதுடன் இன்னும் பலபடியாக எடுத்துக் கூறி மாய மானாகிய அரக்கன் உயிர் விடும்போது இவ்வாறு குரல் கொடுத்தான் என்று எடுத்துக் கூறினான். ஆனால் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாத பிராட்டி தன்னை மறந்த கோபத்தில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/212&oldid=770731" இலிருந்து மீள்விக்கப்பட்டது