பக்கம்:கம்பன் கலை.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீக்குளித்தது ஏன் ? , 205 'கருந்தனி முகலினைப் பிரிந்து கள்வர் ஊர் இருந்தவள் இவள் என ஏச நிற்பனோ? 'வில்பணி கொண்டு, அருஞ்சிறை மீட்டநாள் 'இல்புகத் தக்கலை' என்னில் யானுடைக் கற்பினை, எப்பரிசு இழைத்துக் காட்டுகேன் ? (உருக்காட்டு, 11, 13, 19, 20) இவ்வாறு அஞ்சிப் பேசும் பிராட்டி மற்றொரு குறிப்பையும் பேசுகிறாள்: . 'பிறர் மனை எய்திய பெண்ணைப் பேணுதல் திறன் அலது என்று உயிர்க்கு இறைவன் தீர்ந்தனன்; பிறன் அலர், அவன் உற, போதுபோக்கி, யான் அறன் அலது இயற்றி, வேறு என் கொண்டு ஆற்றுகேன் ? - (14) கடைசி அடியில் 'யான் அறன் அல்லாத காரியத்தைச் செய்து விட்டு இப்பொழுது என்ன செய்ய முடியும் ' என்று பேசுவதுதான் அவள் அக மனத்தைக் காட்டுகிறது. அறன் அல்லாத செயல் யாது? இளையவனை வைததுதான், - - இந்த அடிப்படையில்தான் பிறன் மனை புகுந்ததை அப்பிராட்டி நினைக்கிறாள். தான் அப் பெருந் தவற்றைச் செய்யாமல் இருந்திருந்தால் இத்தனை தொல்லைகளும் வந்திரா. எனவேதான் அவன் குற்ற உணர்வு அகமனத்தில் ஆழத்தில் புதைந்து கிடக்கிறது. இனி அவள் கணவனுடன் சென்று வாழத் தொடங்கினாலும் இளையவன் முகத்தில் எவ்வாறு விழிப்பாள்? அவளுடைய இத்தவறு இல்லாமல் வேறு சூழ்நிலையில் இராவணன் அவளைக் கவர்ந்து சென்றிருந்தால் அவள் மனத்தில் துயரம் இருந்திருக்கும்; ஆனால் குற்ற உணர்வு இருந்திராது. - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/216&oldid=770735" இலிருந்து மீள்விக்கப்பட்டது