14 & கம்பன் கலை மூடிக்கொண்டிருக்கிறான் இரண்டாவது அவதாரமாகிய இராகவன் என்றால், தனக்கு முன்னர் வந்தவனாகிய பரசுராமன் தன்னைத்தானே அழித்துக்கொள்ள வேண்டிய அளவுக்குத் தன்னுடைய அகங்காரத்தை வெளிக்காட்ட வேண்டும். ஆகவேதான் யாரோ என்று கேட்டவன் வாயை மூடிக்கொண்டு இருக்கிறான். இப்பொழுது பரசுராமன், “வல்லை ஆகின் வாங்குதி தனுவை' என்கிறான் அலட்சியத்துடனும் அகங்காரத்துடனும், அத்துடன் நில்லாது, "எல்லா உலகத்தையும் வென்று காசியப் முனிவனுக்குத் தானமாகக் கொடுத்து விட்டேன்” என்று கூறுகின்றபோது காசியப முனிவனைக்கூட இவன் தனக்குக் கீழாகத்தான் நினைக்கின்றான் என்கிற அளவில் கொப்புளிக்கின்றது அந்த அகங்காரம். காசியபன் போன்ற மாபெரும் தவசிக்குக் கொடுத்ததைக்கூட அவனுக்கு நான் இதைத் தானமாகக் கொடுத்துவிட்டேன்' என்று சொல்லும்போது விசுவரூபம் எடுக்கின்றது அவனுடைய அகங்காரம். அதற்குப் பிறகு "வல்லைஆகின் வாங்குதி தனுவை" உனக்கு சாமர்த்தியம் இருந்தால் வாங்குதி' என்றானாம். - . இந்த வாங்குதி என்ற சொல் மிக ஆழமான பொருளை உடையது. வாங்குதல் என்பதற்குக் கையிலே வாங்குவது என்று ஓர் அர்த்தம். வாங்கல் என்றால் வளைத்தல் என்று ஒர் அர்த்தம், பரசுராமன் எந்த அர்த்தத்திலே சொல்லியிருப்பான்? ஆழ்ந்து சிந்திப்போமேயானால் முதல் அர்த்தத்திலே தான் சொன்னான் என்று கொள்ளலாம். ஏன் என்றால் பரசுராமனுடைய அகங்காரத்திலே தன் கையிலே இருக்கிற திருமாலினுடைய வில்லை எவனாலும் வளைக்க முடியாது தன்னைத் தவிர என்று ஒர் எண்ணம். ஆகவே இராமனிடத்திலே-அவனாலும் வளைக்க முடியாது என்று நம்பியவனாகிய பரசுராமன் இப்போது,
பக்கம்:கம்பன் கலை.pdf/22
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை