212 & கம்பன் கலை இது போன்ற இடங்கள் தவிர, கடவுள் வாழ்த்தாக அமைந்துள்ள முதற் பாடல், ஒவ்வொரு காண்டத்திலும் வரும் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் ஆகிய அனைத்தும் அவனுடைய இறையுணர்வைப் பிரதிபலிப்பவையாகவே உள்ளன. 'கல்லிடைப் பிறந்து போந்து கடலிடைக் கலந்த் நீத்தம் என்ற பாடல், பல்பெரும் சமயங்களும் ஒரே பரம் பொருளைத்தான் வெவ்வேறு சொற்களால் குறிப்பிடு கின்றன என்ற பரந்த உணர்வு அவனிடம் இருந்ததை அறிவிக்கிறது. . குகன், சுக்கிரீவன், அனுமன் முதலிய பாத்திரங்களை அன்பு வழியை மேற்கொள்ளும் பாத்திரங்களாகவே படைப்பதன்மூலம் தனக்கு எந்த வழியில் அதிக ஈடுபாடு என்பதைக் குறிப்பாகக் காட்டிவிடுகிறான். கம்பனுடைய காலத்துக்குச் சற்று முன்னர் 8 ஆம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் தம்முடைய அத்வைத வழியை நிறுவினார். சங்கரர் மூலமாக உபநிடதங்கள் எல்லாவிடங்களிலும் செல்வாக்குப் பெற்றன. கம்ப நாடனும் இந்தப் புதிய வழியிலும், உபநிடதங்களிலும் ஈடுபாடு கொண்டு பயின்றிருக்கிறான் என்றும் நினைய வேண்டியுள்ளது. ஆழ்வார்கள் பாடல்களில் மிகவும் தோய்ந்து, அங்குக் காணப்பெறும் பல கருத்துகளைத் தன் காப்பியத்திலும் பயன்படுத்திக் கொண்டுள்ளான். ஆனால், ஆழ்வார்கள் பாடல்களில் இடம் பெறாத உபநிடதக் கருத்துகள் கம்ப நாடன் கவிதையில் மிகுதியும் காணப் பெறுகின்றன. தனித்தனிப் பாடல்களில் பரம்பொருள் பற்றிய உபநிடதக் கருத்துகளை ஏற்றிக் கூறியதுடன் அக்கருத்துகட்கு மிகுதியும் இடம் தருவதற்காகவே இரணியன் வதைப் படலம்' என்ற ஒரு படலத்தையே பயன்படுத்தியுள்ளான். வால்மீகி முதல்,
பக்கம்:கம்பன் கலை.pdf/223
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை