பக்கம்:கம்பன் கலை.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 & கம்பன் கலை எனும்படி போராட்டங்கள் இருந்திருத்தல் வேண்டும். எனவேதான், “காலையில் நறுமலர் ஒன்றைக் கட்டிய மாலையின் மலர்புரை சமய வாதியர் சூலையின் திருக்கு அலால்" -இரணி. 77. என்று பாடிச் செல்கிறான். மும்மூர்த்திகட்கும் அப்பால் நிற்பவனே முழு முதற் பொருள் என்ற உறுதியான முடிவைக் கம்பநாடன் பெற உதவியவை உபநிடதங்களே யாகும். இரணியன் வதையில் 58 முதல் 78 வரை இருபது பாடல்களில் இறை இலக்கணம் கூறுவது முழுவதும் உபநிடதக் கருத்துகளே யாகும். இதனை, - 'அளவையால் அளப்ப அரிது அறிவின் அப்புறத்து உள! ஐய! உபநிடதங்கள் ஒதுறு கிளவி ஆர் பொருள்களான் கிளத்துறாதவன் w களவை யார் அறிகுவார்? மெய்மை கண்டிலார் -இரணி. 26 என்ற பாடலின் மூலம் விளக்கமாகவே கூறிவிடுகிறான். தமிழகச் சமய வரலாற்றில் வேதங்கள், வேத அந்தம், ஆறு அங்கம் என்பவை பெயரளவில் குறிக்கப்பெற்றாலும் வேத அந்தமாகிய உபநிடதங்களை யாரும் இவ்வளவு விரிவாகக் கம்பனுக்கு முன்னரும் பாடவில்லை என்பது தெளிவு. தன் காலத்துக்கேற்ற முறையில் அறிவுவாத அடிப்படையில் இறை இலக்கணம் பேசத் துணிந்தான். ஆனால், தனியே அதனைப் பாடினால் காப்பியத்துடன் ஒட்டாது நின்றுவிடும். எனவே, காப்பியப் போக்கில் இதனைச் செய்யவேண்டும் என்று கருதிய கவிஞன், சரபங்கன், விராதன், இந்திரன், கருடன் என இவர்கள் மூலம் கதையுடன் ஒட்டிய முறையில் இலக்கணம் பேச வைக்கின்றான். இறைவனை உணர்த்த முற்பட்ட உபநிடதம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/225&oldid=770745" இலிருந்து மீள்விக்கப்பட்டது