216 & கம்பன் கலை எந்த மார்க்கம் அவனை ஈர்த்தது என்ற வினாவை எழுப்பினால் கிடைக்கும் விடை சுவை பயப்பதாகும். ழ்வார்கள் பாடல்களில் ஆழங்காற்பட்டுத் தோய்ந்திருந்த அவன் உபநிடதங்களின் அறிவு வாதங்களிலும் மிகுதியும் ஈடுபட்டிருந்தான் என்பதை அவனுடைய பாடல்களைப் படிப்போர் எளிதில் அறிந்துகொள்ள முடியும். வான்மீகத்தில் காணப் பெறாத பல கருத்துகளைக் கம்பன் பாடியுள்ளான். எனினும், அவற்றுள் சில ஆழ்வார்களின் பாடல்களில் தோய்ந்த காரணத்தால் தோன்றியவையாகும். இராம இலக்குவர் களையும் பிராட்டியையும் படகில் ஏற்றிக்கொண்டு குகன் தானே படகை வலித்தான் என்று கம்பன் பாடுகிறான். படகில் வரும்பொழுது அவனைத் தன் தோழனாகவும், பிராட்டியை அவன் கொழுந்தியாகவும், இலக்குவனை அவன் தம்பியாகவும் இராகவன் உறவு முறை வைத்துப் பேசினான் எனக் கம்பன் பாடுவது நெஞ்சை உருக்கும் பகுதியாகும். 'என் உயிர் அணையாய் நீ! இளவல் உன் இளையான்; இந் நந்துதல்வள் நின் கேள். (குகப் பட,42) என்ற இப்பாடல் சிந்திக்கத் தகுந்ததாகும். சாதி வேற்றுமை, உடையார் இல்லார் வேற்றுமை, அரசர் குடிகள் வேற்றுமை முதலியன நிறைந்திருந்த அந்த நாளில் கம்பன் எப்படி இவ்வாறு பாட முடிந்தது? 'ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது - இரங்கி மற்றவற்கு இன்னருள் சுரந்து மாழை மான்மட நோக்கியுள் தோழி உம்பி எம்பி என்றொழிந்திரல் உகந்து தோழன் நீ எனக்கு இங்கு ஒழி'என்ற சொற்கள்.......... o (நாலாயிரம்-1418)
பக்கம்:கம்பன் கலை.pdf/227
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை