பக்கம்:கம்பன் கலை.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 கம்பன் கலை ‘போர் அணங்கு இடங்கர் கவ்வப் பொதுநின்று முதல் என்ன, வாரணம் காக்க வந்தான் அமரரைக் காக்க வந்தான்' 'அறம் தலைநிறுத்தி, வேதம் அருள்சுரந்து அறைந்த நீதித் திறம் தெரிந்து, உலகம் பூணச் செந்நெறி செலுத்தித் தீயோர் இறந்து உகநூறி, தக்கோர் இடர் துடைத்து, ஏக ஈண்டுப் பிறந்தனன்-தன்பொற் பாதம் ஏத்துவார் பிறப்பு அறுப்பான்' (பிணிவிட்டு-79, 81) என்ற பாடல்களில் (பரம்பொருள்) உயிர்கள் மாட்டுக் கொண்ட கருணையாலே இம் மண்ணிடைப் பிறக்கிறான் என்று கூறுகிறான். இந்த முறையால் இறைவன் உலகம், உயிர்கள் இடைத் தொடர்பு என்பவை பற்றிய கவிஞனின் கருத்துகளைக் காணும்பொழுது பின்னர்த் தோன்றப் போகும் விசிட்டாத்வைதக் கொள்கைக்குக் கடைகால் இடுபவனாகவே இக்கவிஞன் காணப்படுகிறான். அன்றியும் நூலின் முதற்பாடலாகிய கடவுள் வாழ்த்துப் பாடலும் இக்கருத்தை வலியுறுத்துவதாகவே அமைந்துள்ளது: உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும் நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா ...அவர் தலைவர்........ - என்ற பாடல் அத்வைதக் கொள்கைக்கு மாறுபட்டி ருப்பதைக் காணலாம். இந்த அடிப்படையில்தான் கவிஞன் உபநிடதங்கட்குப் பொருள் கொள்கிறானே தவிர அத்வைத அடிப்படையில் அன்று என்பதையும் அறிதல் வேண்டும். அவன் காலத்தில் சைவம், வைணவம், சைனம், பெளத்தம் ஆகிய சமயங்களின் கொள்கைகளை இவன் அறிந்திருத்தல் வேண்டும். சைனம், பெளத்தம் என்பவை கடவுள் பொருள்பற்றி ஒன்றுங் கூறவில்லை எனினும் பிற கொள்கைகளில் இந்நாட்டுப் பழஞ் சமயங்களாகிய சைவ வைணவங்களோடு பெரிதும் ஒத்துச் சென்றன. இவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/229&oldid=770749" இலிருந்து மீள்விக்கப்பட்டது