பக்கம்:கம்பன் கலை.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞன் கண்ட சமரசம் 219 ஒவ்வொன்றிலும் உண்மை பெருமளவு இருப்பதைத் தன் அறிவாராய்ச்சியின் மூலம் கண்ட கம்ப நாடன், 'தொல்லையில் ஒன்றேயாகித் துறை தொறும் பரந்த நீத்தம் - சூழ்ச்சி பல் பெரும் சமயம் சொல்லும், பொருளும் போல் பரந்தது அன்றே என்றும் கூறுகிறான். இவனுடைய காலம் வரை இந்நாட்டில் சமயப் பொன்ற இன்றிக் காழ்ப்புணர்ச்சியுடன் சமயவாதிகள் தம்முள் போரிட்டனர். என்பது வரலாறு கண்ட உண்மையாகும். நாயன்மார்களும் ஆழ்வார்களுங்கட்ட இதற்கு விலக்கல்லர். இச் சமயவாதிகள் இவ்வாறு மாறுபாடு கொண்டு பேசிய அக்கால கட்டத்தின் இறுதியில் தோன்றிய கம்பநாடன், இச்சமயங்களுள் ஒர் ஒருமைப்பாட்டைக் (Synthesis) காண முயல்கிறான். அதனாலேயே பல்பெருஞ் சமயம்...அன்றே" என்று கூறுவதுடன் அமையாமல், 'அரன் அதிகன் உலகளந்த அரி அதிகன் என்று உரைக்கும் அறிவிலோர்கள் பரகதி சென்று அடைவரிய பரிசே போல் (நாடவிட்ட-24) என்றுங் கூறுகிறானாகலின் அவனுடைய சமயப் பொறையையும். குறிப்பிட்ட சமயக் கூட்டிற்குள் அடங்க மறுப்பதையும் அறிய முடிகிறது. இந்த உண்மையை அறிய மறுப்பவர்கள். அவனைக் கம்பநாட்டு ஆழ்வாராக்கி மகிழ்கின்றனர்! இவ்வாறு கூறுவதால் அவனுடைய சமயக் கொள்கை என்று ஒன்றும் இல்லையோ என எண்ணிவிடக்கூடாது. பக்தி மார்க்கத்தார் கூறும் இறைத் தன்மை, எளிவந்த தன்மை, உயிர்கள்மாட்டுக் கருணை, மானுட வடிவெடுத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/230&oldid=770751" இலிருந்து மீள்விக்கப்பட்டது