பக்கம்:கம்பன் கலை.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 கம்பன் கலை 'அம்பு இது பிழைப்பது அன்றால்’ என்று சொன்னவுடனே அப்போதுதான் பரசுராமன் உணர்ந்தான். - நீதியாய் முனிந்திடேல் நீ இங்கு யாவர்க்கும் "ஆதியான் அறிந்தனென்" "நீ எல்லோருக்கும் மூலம் என்பதை அறிந்தேன். ஐயா, இப்போது என்னுடைய தவம் முழுவதையும் நீ உன் அம்புக்கு இலக்காக ஆக்கிவிடு” என்று சொல்லும்போது அவனது அகங்காரம் முழுவதும் சரியக் காண்கிறோம். அகங்காரம் அழியுமானால் அடுத்தது வீடுதான் என்பதைக் குறள் அழகாக எடுத்துக்காட்டுகிறது. ஆகவே பரசுராமாவதாரத்திற்கு இருக்கின்ற மாபெரும் குற்றமாகிய ஆணவத்தை நீக்கி, அதனுடைய இருப்பிடத்திற்கே கேடு வைக்கின்ற காரணத்தினாலேதான் இரண்டு அவதாரங்க ளையும் ஒன்றுடன் ஒன்று இணைத்துக் கவிச்சக்கரவர்த்தி பேசினான். - இராமன் பரசுராமன் போல் அல்லாமல் பலராமனும் கிருஷ்ணனும் மக்கள் உலகத்திலே வாழ்ந்தவர்கள். இங்கே அரக்கர் பிரச்சினைகளெல்லாம் இல்லை. ஆகவே மனிதர்களால் ஆக்கப்பட்ட சில சட்டங்களைப் பலராமன் பெரிதுபடுத்துகிறான். முழு அவதாரமாகிய கிருஷ்ணன், சமுதாயம் வளர வளர இந்தச் சட்டங்கள் மாறுபடுகின்றன, இவை துரக்கி எறியப்படவேண்டியவை என்பதை எடுத்துக்காட்டுகிறான். இதுதான் பலராமாவதாரத்திற்கும். கிருஷ்ணா வதாரத்திற்கும் உள்ள ஒற்றுமை என்பதை அறிவோமே யானால் ஒரு மாபெரும் தத்துவத்தைத் தெரிந்து கொண்டவர்களாக ஆவோம். பாரதப் போரிலே பல சமயங்களிலே தலையிடு கின்றான் பலராமன். இறுதியாகப் பீமன் துரியோதனனைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/24&oldid=770758" இலிருந்து மீள்விக்கப்பட்டது