பக்கம்:கம்பன் கலை.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபெரும் அவதாரங்கள் 18 ஜமதக்னி முனிவன் அவ்வளவு தவம் செய்தவன் தான். ஆனால் தன் மனைவியாகிய ரேணுகை எவ்விதத் தவறும் செய்யாதபோது ஆண்களுக்கே உரிய முறையில் தவறான ஒரு முடிவுக்கு வந்து தன்னுடைய மகனை அழைத்து அவளுடைய கழுத்தை வெட்டிவிடு என்று சொல்லுகிறான். இந்தத் தவற்றை ஜமதக்னி முனிவன் செய்ததனாலேதான் அவன் கழுத்து பின்னர் வெட்டப்படுகிறது கார்த்தவீரியார்ஜுனன் மகன்களாலே. ஆகவே எத்தனையோ நீதிகளைப் போதிப்பதற்காக இந்த இரண்டு அவதாரங்ளையும் எடுத்து வைத்து நம் பெரியவர்கள் அற்புதமாக எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். அரக்கர்களுடைய GLlזו-ח நடைபெறுகிறது இராமாவதாரத்திலே. கிருஷ்ணாவதாரத்திலே மனிதர்க ளுடைய சட்டம் எப்படி மாறுபடுகிறது என்பது காட்டப்படுகிறது. ஆகவே இரு பெரும் அவதாரங்கள் ஏன் என்பதைச் சிந்திப்போமேயானால், மிகப் பெரிய தத்துவங்களைப் புரிந்துகொள்ள இயலும் என்று முடிவு செய்ய முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/27&oldid=770761" இலிருந்து மீள்விக்கப்பட்டது