பக்கம்:கம்பன் கலை.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்பியர் மூவர் ஏன் ? 23 கம்பன் இம்மூன்று பாத்திரங்களையும் படைத்துக் காட்டுகிறான். முதலாவது, உள்ளத்து உணர்வு எனப்படும் துரிய அன்பு. அன்பின் அடிப்படையில் எதனையும் சாதிக்கலாம் என்று நம்பினர் இந்நாட்டுப் பெரியோர் அன்பை இரண்டு வகையாகப் பயன்படுத்தலாம். இறைவன் மேல் செலுத்துகின்ற அன்பைக்கூட இரண்டு வகையாகப் பிரித்துக் காணமுடியும். முதலாவது வகை, அன்டை ஒரு சாதனமாகக் (வழி) கொள்ளுவதாகும். இறைவன் மேல் அன்பைச் செலுத்துவதன் மூலம் வீடுபேறு மோட்சம்) என்ற பயனைப் பெற முயல்வதே இம்முறை. இம்முறையில் இறைவன் மேல் செலுத்தப்படும் அன்பு நாளும் நாளும் வளர்ந்து வரும், அது வளர வளர ஏனைய பொருள்களின் மேல் உள்ள பற்றுக் குறையத் தொடங்கும். இறுதி நிலையில் இறையன்பு ஒன்று தவிர ஏனையது ஒன்றும் எஞ்சுவதில்லை. இதனைச் சாதன அன்பு (பக்தி சாதனம்) GT3 isTL//T, இதன் எதிராக உள்ளது அன்பைச் சாதனமாகக் கொள்ளாமல் அதனையே சாத்தியமாகக் (பயன்) கொள்வது. அன்பை வழியாகக் கொண்டு வீடுபேறு போன்ற பயனைப் பெற முடியாமல் அன்பையே பயனாகக் (சாத்தியம்) கொள்வது. இம்முறையில், அன்பு செய்பவன் வேறு எந்தப் பயனையும் விரும்புவதில்லை. மோட்சங்கூட அவனால் விரும்பப்படுவதில்லை. இந்த மன நிலையைத்தான் சேக்கிழார் பெருமான் கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி விடும் வேண்டா விறலின் விளங்கினார். என்று கூறுகிறார் அன்பினால் கும்பிட்டு அதற்கு ஒரு பயனையும் எதிாபாராமல் அந்தக் கும்பிடுதலிலேயே இன்பங் காணுகின்றார்களாம் அடியார்கள் இக்கருத்தைத் தான் குலசேகரப் பெருமான் சற்று விரிவாகக் கூறுகிறார்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/31&oldid=770766" இலிருந்து மீள்விக்கப்பட்டது