பக்கம்:கம்பன் கலை.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்பியர் மூவர் ஏன்? 31 'நன்றி கொன்று, அரு நட்பினை நார் அறுத்து ஒன்றும் மெய்ம்மை சிதைத்து, உரை பொய்த்துளார்க் கொன்று நீக்குதல் குற்றத்தில் தங்குமோ? - (கிட்கி. படலம்-2, 3) என்று பேசுகிறான். இவ்வளவு இழிநிலையைச் சுக்ரீவன் அடைந்தாலும், இராமனிடம் வந்து தன் பிழைக்கு இரங்கி மன்னிப்புக் கேட்டவுடன் இராகவன் இவனை மன்னித்து ஏற்றுக் கொள்கிறான். இதே சுக்ரீவன் இராமனுடன் தங்கி நெருங்கிப் பழகத் தொடங்கியபின் தன் உயிரையும் கொடுத்து இராகவனுக்கு உதவ முன் வருதலை இராம-இராவணன் போரின்போது காண்கிறோம். அவனுடைய அறிவும் உணர்வும் (ஞானமும், பக்தியும் சமயத்தில் அவனைக் கைவிட்டாலும் இறுதியில் அவன் செயல்கள் மூலமாக இராமனின் தம்பியாக ஆவதற்குரிய தகுதியைப் பெற்றுவிடுகிறான். சராசரி மனிதனுடைய குற்றங்கள் எத்துணைப் பெரிய மலையளவு இருப்பினும் அவையும் மன்னிக்கப்படும் என்பதற்கும், அவனும் திருவருளுக்குப் பாத்திரமாகலாம் என்பதற்கும் எடுத்துக்காட்டாக சுக்ரீவன் நிற்கிறான். சுக்ரிவன் மனத் தளர்ச்சியும், பின்னர் இராமனுடன் வாழத் தொடங்கியபின் அவன் பெற்ற மன வளர்ச்சியும் சராசரி மனிதனைப் படம் பிடித்துக் காட்டுவதாக அமைகின்றன. எனவே அவனையும் இராமன் தம்பியாக ஏற்றுக்கொள்கிறான் எனில் சராசரி மனிதனுக்கும் இறையருள் என்றும் கிடைக்கும் என்பதற்கு அது சான்றாகிறது. . . - மூன்று தம்பியரை இராமன் வனத்தில் ஏற்றுக்கொண்டாலும் மூவரும் மூன்று வேறுபட்ட பண்பினை உடையவர்கள். இறைவன் திருவருளுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/40&oldid=770776" இலிருந்து மீள்விக்கப்பட்டது