பக்கம்:கம்பன் கலை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 கம்பன். கலை எத்தகையவர்களும் பாத்திரராக முடியும் என்ற பேருண்மையை வெளிக்காட்டவே இம்மூவரும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றனர். அன்பே வடிவான குகன் பக்தி மார்க்கத்தின் பிரதிநிதியாகவும், அறிவே வடிவான வீடணன் ஞானமார்க்கத்தின் பிரதிநிதியாகவும் இருக்கின்றனர். இரண்டு வழிகளிலும் முற்றிலும் ஈடுபடாமல் இதிற் கொஞ்சமும் அதிற் கொஞ்சமும் ஏற்றுக் கொண்டு ஆனால் அதே நேரத்தில் சாதாரண மனிதர்கட்குரிய குறைபாடுகளையும் பெற்று, கடமையைச் செய்து வாழும் எந்த மனிதனுங்கூட இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படும். தகுதி பெற்றவனாகிறான் என்பதற்கு எடுத்துக்காட்டாக சுக்ரீவனும் அமைகின்றான். இராகவன் மூன்று தம்பியரை ஏற்றதாகக் கூறுவது, இந்த மூன்று வழிகளில் - பக்தி, ஞானம், கர்மம் - எதனைப் பின்பற்றினாலும் இறையருள் பெறுவது திண்ணம் என்ற அடிப்படையை அறிவுறுத்தவேயாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/41&oldid=770777" இலிருந்து மீள்விக்கப்பட்டது