பக்கம்:கம்பன் கலை.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதனின் பிரதிநிதி 35 இப்பதினைந்து பாடல்களே போதுமானவை. தூரத் திலிருந்து இராம இலக்குவர்களைக் கண்டவுடன் மாருதி மனத்தில் முதன் முதலாகத் தோன்றிய எண்ணம், "தேவருக்கு ஒரு தலைவராம் முதல் தேவர் எனின் மூவர்; மற்றும், இவர் இருவர்......... கேவலத்து இவர் நிலைமை தேர்வது எக்கிழமை கொடு" (அனும - 5) என்பதாகும். இந்த எண்ணம் வலுப்பெற்ற நிலையில் இறுதியாக அவன், - "மாயத் தொல்வினைதன்னை நீக்கி ...மீளா நெறி உய்க்கும் தேவரோதாம் ? என்ற எனக்கு உருகுகின்றது; இவர்கின்றது அளவில் காதல்." (அனு - 13) என்ற முடிவுக்கு வந்து, இராமனைக் காணச் செல்கிறான். இராமனைப் பற்றி இத்துணை உயர்வான எண்ணத்துடன் அவனை நெருங்கிச் சென்று, அவன் முழுமுதற் பொருள் என்று துணிந்து கொண்டான். என்றாலும், சுக்கிரீவனிடம் பேசும் பொழுது அறிவாற்றலில் மேம்பட்ட மாருதி, இராமன் முழுமுதற் பொருள் என்ற கருத்தை முதலிற் கூறாதது ஆராய்தற்குரியது. தன் தலைவனாகிய சுக்கிரீவனுடைய அறிவையும், கல்வியையும் மாருதி நன்கு அறிந்திருந்தமையின் பரம்பொருள் பற்றிய பேச்சை முதலில் எடுக்கவே இல்லை. அதற்குப் பதிலாக இராமனைப் பற்றிச் சுக்கிரீவனிடம் கூறத் தொடங்கிய அனுமன், - "..........ιιιιιιιιιιιιιι. விரைசெய்தார் வாலி என்ற அளவுஇலா வலியினான் உயிர்தெறக் காலன் வந்தனன்; இடர்க்கடல் கடந்தனம்..." நட்புக்-2)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/44&oldid=770780" இலிருந்து மீள்விக்கப்பட்டது