பக்கம்:கம்பன் கலை.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 கம்பன் கலை எதிரே உள்ளவன், 'உன் உதவியை நாடி வந்தேன்' என்று கூறுவதைக் காதிற்கூட வாங்கிக்கொள்ளாமல் தன் குறையை ஒப்பாரி வைக்கும் இந்தச் சுக்கிரீவனும் ஒரு தம்பியாக ஏற்றுக்கொள்ளப் பெறுகிறான். இராகவனின் பெருமைக்கும் சுக்கிரீவனுடைய சிறுமைக்கும் இது ஒர் எடுத்துக் காட்டாகும். சுக்கிரீவனுடைய இந்த வார்த்தைகளைக் கேட்ட இராகவன் இரக்கத்துடன் அவனைப் பார்த்து, உன் தனக்கு உரியஇன்ப துன்பங்கள் உள்ள, முன்னாள் சென்றன போக, மேல்வந்து உறுவன தீர்ப்பல்; அன்ன நின்றன, எனக்கும் நிற்கும் நேர் (20) என்று கூறிவிட்டான். பின்னர்ச் சுக்கிரீவன் இருக்கும் இடம் சென்று, அவனும் மனைவியை இழந்து வாடுபவன் என்பதை அறிந்தவுடன் தசரத குமாரன் தன்னையே மறந்துவிடுகிறான். தன் நண்பனாகிய சுக்கிரீவன் மனைவியை இழக்கக் காரணமாக இருந்தவன் அவன் தமையனாகிய வாலி என்பதை அறிகிறான் இராகவன். தம்பியின் பொருட்டாக அரசைத் துறந்து வரும் ஒருவன், தம்பியின் மனைவியைக் கவர்ந்தான் ஓர் அண்ணன் என்பதை எவ்வாறு சீரணிக்க முடியும்? உடனே பொங்கி எழுந்து, - "உலகம் ஏழினோடு ஏழும்வந்து அவன் உயிர்க்கு உதவி விலகும் என்னினும், வில்லிடை வாளியின் வீட்டித் தலைமை யோடுநின் தாரமும், உனக்குஇன்று தருவென்" - - * (நட்பு-70) என்று பேசுகிறான். இப்பொழுதுதான் சுக்கிரீவன் மனிதர்களாகிய நம்முடைய பிரதிநிதியாக நடந்து கொள்கிறான். அவன் உடன்பிறந்த சந்தேகம் மறுபடியும் அவனைப் பற்றிக்கொள்கிறது. தன் தமையனாகிய வாலியை எதிர்ப்பேன் என்று முன்வந்து வாய் விட்டுக் கூறும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/49&oldid=770785" இலிருந்து மீள்விக்கப்பட்டது