பக்கம்:கம்பன் கலை.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை கம்பன் கலை என்ற தலைப்பில் வெளிவரும் இந்நூலில் காணப்பெறும் பல கட்டுரைகள் முன்னரே வெளிவந்தவை ஆகும். அவை இப்பொழுது எங்கும் கிடைக்காமையால் இப் புதிய பதிப்பு வெளிவருகிறது. இந்நூலின் முதல் கட்டுரையாகிய "இருபெரும் அவதாரங்கள்", படிப்பவர்கள் மனத்தில் ஒரு வியப்பைத் தோற்றுவிக்கும். என்னுடைய எழுத்து நடையைப் பயின்றவர்களுக்கு இக் கட்டுரை நடைப் புதுமையாக இருக்கும். காரணம், இக்கட்டுரை எழுத்து வடிவில் இடம் பெறாமல் பேச்சு வடிவில் முதன்முதல்ாகச் செய்யப் பட்டதாகும். கம்பன் விழா ஒன்றில் என் தலைமை உரையைத் தொடங்குவதற்கு ஐந்து மணித்துளிகள் முன்னர் கோவைக் கம்பன் கழகத் தலைவர், கம்பன் அறநெறிச் செம்மல் திரு. ஜி.கே. சுந்தரம் அவர்கள், இராமன், பரசுராமன் என்ற இரண்டு அவதாரங்களும் ஒரே காலத்தில் தோன்றியது ஏன் என்ற வினாவை எழுப்பி இயன்றால் அதற்கு அமைதி கூறுமாறு வேண்டினார். திடீரென்று தோன்றிய அந்த வினாவிற்கு, அத் தலைமை உரையில் உடனடியாகக் கூறிய விடைதான் இக்கட்டுரை. பேச்சு வழக்கில் உள்ள அதனை எழுத்து நடைக்கு மாற்றாமல் ஒலிப்பதிவு நாடாவில் உள்ளதை அப்படியே தந்துள்ளேன். அதிலிலுள்ள குறைகளை நன்கறிவேன் என்றாலும், இதை ஒரு புதுமுயற்சியாகச் செய்துள்ளேன். இக்கட்டுரை தவிர, ஏனையவை எழுத்து வடிவிலேயே பிறந்தவை ஆகும். இவற்றுள் சில இதே தலைப்பில் 1990ஆம் ஆண்டு வெளிவந்தபொழுது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/5&oldid=770786" இலிருந்து மீள்விக்கப்பட்டது