பக்கம்:கம்பன் கலை.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதனின் பிரதிநிதி 41 யாரையும் சுக்கிரீவன் கண்டதில்லை. அவ்வாறு இருக்க, வாலியை மட்டும் அல்லாமல் பதினான்கு உலகங்களும் அவனுக்கு உதவியாக வரினும் அனைவரையும் வென்று சுக்கிரீவனுக்குப் பட்டமும் மனைவியும் தருவென் என்று இராம்ன் கூறிவிட்டானே. அப்படி இருக்க, இப்பொழுது இராமன் கூறுவதை ஏற்றுக்கொள்வது தவிரச் சுக்கிரீவனுக்கு வேறு வழி யாது? இருந்தும், இராமன் கூறியவுடன் மந்திராலோசனை சபையைக் கூட்டுகிறான். இந்த சபையைக் கூட்டினாலும் சுக்கிரீவன் பிறர் அறியத் தன் மனத்தில் உள்ள சந்தேகங்களை வெளிப்படுத்தவில்லை. இத்துணைச் சிறப்புவாய்ந்த இராமனைத் தான் ஐயப்படுவதாக அமைச்சர் முன்னர் எவ்வாறு வெளிப்படுத்த முடியும்? எனவே, அவன் சபையைக் கூட்டிவிட்டாலும் வெளிப்படையாக ஒன்றுங் கூறவில்லை. குறிப்பில் குறிப்புணரும் ஆற்றல் பெற்ற அனுமன், "உன்னினேன் உன்தன் உள்ளத்தின் உள்ளதை, உரவோய்! 'அன்ன வாலியைக் காலனுக்கு அளிப்பதுஓர் ஆற்றல் இன்ன வீரர்பால் இல்லை' என்று அயிர்த்தனை; இனியான் சொன்ன கேட்டு, அவை கடைப்பிடிப்பாய் ! எனச் சொன்னான்' நட்பு-73) என்று கூறத் தொடங்குகிறான். இப்பொழுது அனுமனுடைய பேச்சு முன்போல் இல்லை. இராமனைப் பற்றிய ஐயங்கள் நீங்கி விட்டன. வாலியை வெல்ல முடியுமா என்ற ஒரே ஒரு ஐயம் மட்டுமே உள்ளது. எனவே அதனைப் போக்கக்கூடிய வாதங்களை மட்டுமே அனுமன் பேசுகிறான். கரன், தாடகை முதலியோரை வென்றதை மட்டும் வைத்துக்கொண்டு ஒருவன் வாலியை வென்று விடுவான் என்று கூற முடியாது. முன்னர்கூறிய அனைவரும் இராவணனுக்குக் கீழ்ப்பட்டவர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/50&oldid=770787" இலிருந்து மீள்விக்கப்பட்டது