பக்கம்:கம்பன் கலை.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதனின் பிரதிநிதி 43 வாயுதேவன் கூறிய சுருதிப் பிரமாணத்தையும் எடுத்துக் கூறுகிறான்: "என்னை ஈன்றவன், இவ்வுலகு யாவையும் ஈன்றான் தன்னை ஈன்றவற்கு அடிமை செய்; தவம் உனக்கு அஃதே உன்னை ஈன்றனற்கு உறுபதம் உளது என உரைத்தான்" நட்பு-76) இவ்வாறு தன் தந்தை கூறியவுடன், பரம் பொருளை அறிந்து கொண்டல்லவா அடிமை செய்ய முடியும்? அவனை எவ்வாறு அறிவது? என்று வினவினானாம். அதற்கு வாயுதேவன், "மகனே! அப்பொருளை அறிய முடியாது. ஆனால் யாரைக் கண்டவுடன் எலும்பு உருகும் அன்பு தோன்றுகிறதோ அவனே பரம்பொருள் என அறிந்து கொள்வாயாக" என்ற கருத்தில் கூறுகிறான்: "துன்பு தோன்றிய பொழுது, உடன் தோன்றுவன், எவர்க்கும் முன்பு தோன்றலை அறிதற்கு முடிவுஎன் ? என்றியம்ப 'அன்புசான்று' என உரைத்தனன், ஐய! என் யாக்கை என்பு தோன்றல, உருகின எனின்பிறிது எவனோ?" (நட்பு-77) தன் தலைவனாகிய சுக்கிரீவன் மனம் தேறுதல் அடைதற்காக சுருதி, காட்சி, அனுமானம் என்ற மூன்று பிரமாணங்களைக் காட்டிவந்தவன், பரம்பொருள் என்று நிறுவிவிட்டு இறுதியாகத் தன்னுடைய அனுபவத்தையும் எடுத்துக் கூறுகிறான் மாருதி, மேலே கூறப் பெற்றுள்ள மூன்று பிரமாணங்களைக் காட்டிலும் அனுபவம் சிறந்தது என்பது வெளிப்படை மூன்று பிரமாணங்களும் அறிவின் அடிப்படையில் எழுவன. அனுபவம், உணர்வில் கலந்து வெளிப்படுவது. இத்துணை எடுத்துக் கூறியும் சான்று காட்டியும் ஒருவன் தெளிவடையவில்லை. அந்த ஒருவன்தான் சுக்கிரீவன். எனவேதான், எத்துணை ஆயிரக்கணக்கான நூல்களைக் கற்றும் பிறர் சொல்லக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/52&oldid=770789" இலிருந்து மீள்விக்கப்பட்டது