44 ) கம்பன் கலை கேட்டும் தெளிவடையாத மனித இனத்தின் பிரதிநிதியாவான் சுக்கிரீவன்' என்று கூறப்பெற்றது. அறிஞர்கள் எவ்வளவு எடுத்துக் கூறினாலும், எத்துணை நூல்களைக் கற்றாலும் மனத்தில் தெளிவ டையாத சிலர், ஏதோ ஒரு நிகழ்ச்சியில் முற்றிலும் மாறிவிடுவதுண்டு. இது உலக அனுபவம். அதேபோல், இராமன் வன்மையில் ஐயங்கொண்டிருந்த சுக்கிரீவன், அவன் மராமரத்தில் அம்பு ஒட்டியதைக் கண்டவுடன் மனம் திருந்திவிட்டான். அறிவின்மிக்க மாருதி கூறியபொழுது ஓரளவு மனம் மாறுபட்டான் சுக்கிரீவன். அடுத்து, இராமனைக் கண்டவுடன் மேலும் சிறிது மாற்றம் பெற்றான். என்றாலும், சராசரி மனிதனுக்குரிய நம்பிக்கை, நம்பிக்கை இன்மை என்ற இரண்டும் சுக்கிரீவனிடம் நிறைந்திருந்திருந்தன. எனவே, ஒவ்வொரு மாற்றமும் நிகழ்ந்து, நம்பிக்கை ஏற்பட்ட விரைவில் அது இழக்கப்பட்டு நம்பிக்கை இன்மை தோன்றிவிடுகிறது. இறுதியாக, ஊசலாடும் மனமும் தெளிந்து, "வையம் நீ; வானும் நீ. நாயினேன் உய்யவந்து உதவினாய்; உலகம் முந்து உதவினாய்" (மராமர-19) என்று பேசுகிறான். இறுதி' அடியில், "நாயினேன் உய்யவந்து உதவினாய், உலகம்முந்து உதவினாய்” என்ற பகுதி சிந்திப்பதற்குரியது. தன்னை வாழ வைத்தான் பரம் பொருள் என்பதுடன், உலகம் முந்து உதவினாய் என்று ஏன் கூற வேண்டும்? முந்து என்ற சொல்லுக்கு முன்னர் எனப் பொருள் கொண்டு, முன்னர் இவ்வுலகத்தைப் படைத்தாய் என்றே பலரும் பொருள் கூறுவர். முந்து என்பதற்கு முழுவதும் எனப் பொருள் கொண்டால் இவ்வடியின் தனிச் சிறப்பு விளங்கும். "ஐயனே! என்போன்ற சந்தேகப் பிராணியின் ஐயங்களைப் போக்கி உய்யக் கொண்டாய்! அது மட்டுமா? உலகம் முழுவதும் என் போன்றவர்களே நிறைந்திருத்தலின் நானே உன்னருளுக்குப் பாத்திரனானேன் என்பதால், என்போன்ற
பக்கம்:கம்பன் கலை.pdf/53
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை