பக்கம்:கம்பன் கலை.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

VI அந்நூலுக்கு திறனாய்வாக மதுரைப் பல்கலைக்கழக தமிழ்த் துறைத்தலைவர், தமிழறிஞர் டாக்டர் தமிழண்ணல் அவர்கள் மிக நீண்ட கட்டுரையாக தினமணி சுடர் இதழில் எழுதியிருந்தது பெருமதிப்புடையதாகும். எனவே, அந்த நீண்ட திறனாய்வின் ஒரு சில பகுதிகளை எடுத்து "கம்பனைக் கற்கும் நெறிமுறைகள்” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளேன். இந்த அரிய திறனாய்வை எழுதி உதவிய டாக்டர் தமிழண்ணல் அவர்களுக்கு நான் என்றும் கடப்பாடுடையேன். என் 80ம் ஆண்டு நிறைவை ஒட்டி இந்நூலை வெளியிடும் கங்கைப் புத்தக நிலைய உரிமையாளர் திரு. இராமநாதன் அவர்கட்கு என் நன்றி உரியதாகும். சென்னை, ஆசிரியன் நவம்பர் 10, 1996

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/6&oldid=770797" இலிருந்து மீள்விக்கப்பட்டது