50 ல் கம்பன் கலை கூறலாம். அவனைப் பிரிந்து தாங்கள் வாழ இயலாது என்று கூடக் கூறிவிடலாம். ஆனால், இவ்வாறு கூறுவதால் மட்டும் மன்னன் மகிழ்ந்துவிடுவான் என்று எவ்வாறு கூற இயலும்? தன்மாட்டு அவர்கள் கொண்டுள்ள அன்பை நினைந்து மன்னன் ஒரு கணம் மகிழ்ச்சி அடையலாம். ஆனால் மறுகணம் அவனுடைய கலக்கம் பெரிதாகிவிடும். "எப்படி இருந்தாலும் நாளை இல்லாவிடினும் என்றாவது ஒரு நாள் இராமன் முடி சூடிக்கொண்டுதானே ஆகவேண்டும்? இதனை இந்த அமைச்சர்கள் அறியார்களா? இராமன் என்றைக்கு அரசனாக ஆனாலும் இவர்கள் தானே அமைச்சர்களாக இருக்கப்போகிறவர்கள் : தங்கள் எதிர்கால மன்னன் பட்டத்துக்கு வருவதையே விரும்பாத இவர்கள் நாளைக்கு அவனுடன் எவ்வாறு ஒத்துழைக்கப் போகிறார்கள்? சூழ்வாரைச் சூழ்ந்து ஒழுகலான், மன்னவன் சூழ்வார் கண்ணாகக் கொளல்', என்பது அறநூலின் விதியாயிற்றே ! ஒருவன் பட்டத்துக்கு வருவதைக்கூட விரும்பாத அமைச்சர்களை வைத்துக்கொண்டு அம் மன்னவன் யாது செய்ய இயலும்? அருமை மைந்தன் இராமன் நாளை முடிசூடியவுடன் அமைச்சர் குழாத்தின் ஒத்துழையாமை இயக்கத்தையா முதன் முதலில் எதிர்பார்ப்பது?” தசரதனுக்கு வலக்கை போன்று இருந்தவர்கள் இந்த அமைச்சர்கள். அவனே இதோ அவர்களிடம் பேசுகிறான்: "உம்மையான் உடைமையின் உலகம் யாவையும் செம்மையின் ஒம்பிநல் அறமும் செய்தனன் இம்மையின் உதவிநல் இசைந டாயநீர் அம்மையும் உதவுதற்கு அருள வேண்டுமால்" (மந்திரப் படலம், 24) "இந்த அமைச்சர் அவை இருந்ததனால்தானே நான் செம்மையாக ஆட்சி செய்து புகழை ஈட்ட முடிந்தது? இதே அமைச்சர் குழாம் மகனுக்கும் பேருதவியாக இருந்து
பக்கம்:கம்பன் கலை.pdf/60
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை