பக்கம்:கம்பன் கலை.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூரிய தேர்வலான் 51 புகழைத் தேடித் தரும் என்றல்லவா நான் கருதினேன்? என் கருத்துக்கு எதிராக இவர்கள் இராமன் பட்டத்துக்கு வருவதைக் கூட விரும்பவில்லையே! முதியவனுடைய ஆட்சியில் பழகிய இவர்கள் இளமையின் ஆட்சியை விரும்பவில்லையா? இந்த மாற்றத்தை அனுசரித்து நடவாத இவர்கள் எவ்வாறு அமைச்சராக இருக்கத் தகுதி யுடையவர்கள்” என்று தசரதன் நினைத்துவிட்டால்? இவ்வாறு தசரதன் நினைக்கவும் கூடும். இராமன் வருவதைத் தாங்கள் விரும்பவில்லை என்று அமைச்சர் கூறிவிட்டால் தருமசங்கடம் என்று கூறும் நிலையில் இருக்கிறான் சுமந்திரன். தசரதனுடைய கருத்தை ஏற்றுக்கொண்டு பேசினாலும் மறுத்துப் பேசினாலும் அரசன் மனம் உளையுமே என்று கவலைப்பட வேண்டிய சந்தர்ப்பம். அரசியல் முறையில் ஏற்படும் இந்த அல்லல் ஒருபுறம் இருக்க உண்மையாகவும் சுமந்திரன் வருந்துகிறான். தசரதனுடைய உற்ற நண்பனாகவும் தேர்வலானாகவும் பல்லாண்டுகள் வாழ்ந்து விட்ட சுமந்திரனுக்குத் தசரதனுடைய பிரிவு பெருவருத்தத்தை உண்டாக்குகிறது. இராமன் மேல் அவன் கொண்டுள்ள காதலும் அளவற்றது. சுமந்திரன் தூக்கி வளர்த்த பிள்ளை இராமன். எசமானனுடைய மூப்புக் காலத்தில் பிறந்தவன் என்பதால் மட்டும் இராமனிடம் சுமந்திரன் அன்பு செலுத்தவில்லை. இராமன் எத்தகையவன் என்பதையும் பிறர் எவ்வாறு அவனை நினைக்கின்றார்கள் என்பதையும் இதோ வசிட்டன் கூறுகின்றான்: “கண்ணினும் நல்லன் கற்றவர் கற்றிலா தவரும் உண்ணு நீரினும் உயிரினும் அவனையே உகப்பார்" "மனிதர் வானவர் மற்றுளார் அறங்கள்காத்து அளிப்பார் இனியிம் மன்னுயிர்க்கு இராமன் சிறந்தவர் இல்லை" . (மந்திரப் படலம், 40, 41)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/61&oldid=770799" இலிருந்து மீள்விக்கப்பட்டது