56 ல் கம்பன் கலை கையேயி இரண்டு வரங்களில் ஒன்றினால் பரதனுக்கு முடியைப் பெற்றுக்கொண்டு ஏனையது ஒன்றால் இராமனைக் காட்டுக்கனுப்ப வழி தேடி விட்டாள். தசரதன் வேறு வழியின்றி அவளிடம் வாதாடிப் பார்த்து இறுதியாக இரண்டு வரங்களில் ஒன்றைப் பெற்றுக் கொண்டு மற்றொன்றை விட்டுக் கொடுக்குமாறு வேண்டுகிறான். "கண்ணே வேண்டும் என்னினும் ஈயக் கடவேன்என் உள்நேர் ஆவிவேண்டினும் இன்றே உனதுஅன்றோ பெண்ணே வண்மைக் கேகயன் மானே பெறுவாயேல் மண்ணே கொள்நீ மற்றையது ஒன்று மறஎன்றான்" (கைகேயி சூழ்வினைப் படலம், 28) இப்பாடலின் நான்காம் அடியில் மண்ணே கொள் நீ! என்பதில் ஒரு வரம் விரிவாகக் கூறப்படுகிறது. ஆனால், இரண்டாவது வரத்தைத் தன் வாயாற்கூடத் தசரதன் கூற விரும்பவில்லையாகலின் மற்றையது என்று மட்டும் குறிப்பிட்டு நிறுத்துகிறான். தசரதனுக்கு இராமனையலாது உயிர் வேறு இல்லை. அத்தகைய உயிரனைய மகனைக் காட்டுக்கு அனுப்புகிறேன் என்று தசரதன் வாய் கூசாமல் கூற முற்படுவானா? ஒரு நாளும் இத்தகைய அமங்கல வழக்கைக் கூற அவன் முற்படமாட்டான். ஆனாலும் கூறித் தொலைக்கவேண்டிய கடப்பாடு ஏற்படும் பொழுது எவ்வளவு திறமையுடன் மற்றையது என்றுமட்டும் கூறி நிறுத்துகிறான்! பெருங்காப்பியங்கள் பாடும் கவிஞர்கள் அனைவருமே சந்தர்ப்பம் நேரும்பொழுது இவ்வாறு அமங்கல வழக்கை நீக்கி மங்கல வழக்காலேயே பேசுவார்கள். பெரிய புராணம் பாடிய சேக்கிழாரும் இத்தகைய மங்கல வழக்குப் பெய்து பாடுவதை அந்நூல் கற்றார் அறிவர். ஏனாதி நாதரை அவருடைய பகைவன் வஞ்சனையால் அழிக்கக் கருதி திருநீற்றை நெற்றியில்
பக்கம்:கம்பன் கலை.pdf/66
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை