காதலும் கடமையும் 71 தன்மையைக் கண்டு இவ்வாறு அவர்கள் வருந்துகிறார்கள். இதேபோலத்தான் இப்பொழுது சீதை பேசுகிறாள். இராமன் காடு வந்ததால் ஏற்பட்ட விளைவைச் சற்றும் ஆராயாதவளாய் என்னுடைய மைனாப் பறவையையும் கிளியையும் நன்கு கவனித்துக் கொள்ளுமாறு கூறுக’ என்று கூறுகிறாள். தான் காட்டில் வந்ததால் சிறிதும் கவலை கொள்ளாமல் இவ்வாறு பேசுகிறாளே என்று நினைத்தவுடன் சுமந்திரனுடைய துயரம் பீறிட்டுக் கொண்டு வெளிவருகிறது. சீதைக்குத் தந்தைபோல இருக்கின்ற அவன் அவளது பேதைமையையும், இதனால் அவள் அனுபவிக்கப் போகின்ற தீமைகளையும் நினைந்து இவ்வாறு அரற்றுகிறான். இவை அனைத்தும் முடிந்த பின்னர் இராமனையும் அவனுடைய துணைவரையும் காட்டில் விட்டு மீள்வது தவிர வேறு வழியில்லை என்பதனை அறிந்த சுமந்திரன் புறப்பட்டு விட்டான். "...................................... தன் கல்வி மாட்சியால் ஒட்டினன் ஒருவரும் உணர்வு றாமலே" (தைலமாட்டு படலம், 47) என்று கம்பநாடன் கூறும்பொழுது சுமந்திரனுடைய தேரோட்டும் சிறப்பை நன்கு அறிகிறோம். இதனை அடுத்து நாம் சுமந்திரனைக் காண்டது தசரதன் இறந்துவிட்ட பின்னர் ஆகும். வசிட்ட முனி தசரதன் இறந்த பின்னர்ப் பரதன் கேகயத்திலிருந்து வருகிறவரை சுமந்திரனே அரசியலை நடத்த வேண்டும் என்று தன் விருப்பத்தை கூறிவிட்டுத் தன் பன்னசாலை சென்றுவிட்டான். எனவே, தேர்வலானாகிய சுமந்திரன் அரசியலாகிய தேரையும் ஒட்டும் வன்மை படைத்தவனாக இப்பொழுது காட்சியளிக்கிறான். ஒரு பெரிய நாட்டின் அரசன் திடீரென்று இறந்துவிட்டான். பட்டத்திற்கு
பக்கம்:கம்பன் கலை.pdf/81
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை