பக்கம்:கம்பன் கலை.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 ல் கம்பன் கலை உரியவன் காடு சென்று விட்டான். பட்டத்தைப் பெற்றவன் நாட்டுக்கு வந்துசேர இன்னும் எத்துணை நாட்கள் ஆகுமோ தெரியாது. இந்த நிலையில் யார் ஆட்சியை மேற்கொண்டாலும் அது மிகவும் தொல்லைதருவது என்று கூறத் தேவை இல்லை. எனினும் சுமந்திரனே இப்பொழுது ஆட்சி செய்யத் தக்கவன் என்று முனிவன் அவனிடம் ஆட்சியை ஒப்படைப்பதானால் சுமந்திரனுடைய திறமைக்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டு என்ன வேண்டும்? - மரம் எவ்வளவு பெரிதாக வளர்ந்திருக்கிறது என்று வியப்படைகிறோம். சாதாரண காலங்களில் மரத்தைப் பற்றி வியப்படைவதைக் காட்டிலும், பெருங்காற்று அடித்து அப்பொழுதும் அம்மரம் தீங்கடையாமல் இருந்தால் அப்பொழுது மிகவும் வியப்படைகிறோம். ஏன்? பெருங் காற்றிலும் மரம் விழாமல் இருக்கிறது என்றால் அதனுடைய வேர்கள் மிக ஆழமாகவும் அழுத்தமாகவும் உள்ளன என்பதுதானே கருத்து? அதுபோலத் தசரதன் இறந்து இராமன் காடு சென்ற காலத்தும் அயோத்தி அரசியல் குழப்பம் இன்றி இருந்தது என்றால், அதன் பெருமை யாரைச் சேர்ந்தது? கண்காணாத வேர்கள் மரத்தைக் காப்பதுபோலப் பிறர் கண்ணில் மிகுதியும் படாத சுமந்திரனே அயோத்தி அரசைக் காவல் புரிந்தான் என்பதே தேற்றம். - பரதன் தமையனைக் கொணரவேண்டும் என்ற கருத்துடன் வந்துள்ளான். அவனைத் தொடர்ந்து அயோத்தி மாநகரமே வந்துள்ளது என்றுகூடக் கூறலாம். ஆனால், அனைவரும் கங்கையின் வடகரையில்தான் தங்கியுள்ளனர். குகனுடைய உதவி இல்லாமல் ஆற்றைக் கடத்தல் ஆகாத செயல். ஆனால், குகனோ லக்குவனுடைய சொற்களை நம்பிக்கொண்டு, பரதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/82&oldid=770822" இலிருந்து மீள்விக்கப்பட்டது