பக்கம்:கம்பன் கலை.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபெரும் அவதாரங்கள் பாரத நாட்டைப் பொறுத்தமட்டில் இராமாயணக் கதை, பாரதக் கதை என்ற இரண்டும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வழங்கிவருகின்ற கதைகளாகும். இந்த இரண்டு கதைகளிலுமே ஒரு தனிச்சிறப்பு உண்டு. திருமால் அவதாரம் எடுத்து வந்தார் என்று சொல்லுகின்ற இவ்விரண்டு கதைகளிலும் ஒரு அவதாரமாக இல்லாமல் இரண்டு இரண்டு அவதாரங்கள் பேசப்படுவதைக் காணலாம். இராமகாதையைப் பொறுத்தமட்டில் இராமா வதாரம், பரசுராமாவதாரம் என்ற இரண்டும் பேசப்படும். அதுபோலப் பாரதக் கதையைப் பொறுத்தமட்டில் கிருஷ்ணாவதாரம், பலராமாவதாரம் என்ற இரண்டும் பேசப்படும். ஆனால் அந்த இரண்டு அவதாரங்கள் ஏன் என்ற வினாவைப் பழங்காலத்தில் ஒருசிலர் கேட்டிருக்கக்கூடும். எப்படி விடை சொல்லமுடியும் என்கிற ஆராய்ச்சியில் புகுந்து ஒருவகையாக அமைதி கண்டுவிட்டார்கள். பரசுராமாவதாரம், பலராமாவதாரம் என்ற இரண்டுமே திருமாலினுடைய முழு வன்மையும் பெற்ற அவதாரங்கள் அல்ல, அம்சாவதாரங்கள் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். அதாவது திருமாலினுடைய ஒரு பகுதி - குறிப்பிட்ட ஒரு பகுதி - குறிப்பிட்ட 1.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/9&oldid=770830" இலிருந்து மீள்விக்கப்பட்டது