பக்கம்:கம்பன் கலை.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 ) கம்பன் கலை தாகத்தைப் போக்கவும் முயற்சி எடுக்கவேண்டுமென்ற எல்லையற்ற அன்பினால் தூண்டப்பெற்றுத் தேனும் மீனும் கொண்டு வந்துள்ளான். தான் என்ற அகங்காரத்தைத் தம்மால் அன்பு செய்யப்பெற்ற பொருளிடம் முற்றிலும் கரைத்துக்கொள்ளுகின்ற அநந்யபாவம் நிறைந்த பக்தி அல்லது அன்பாகும் குகனுடைய அன்பு, சர்வ வல்லமை யுள்ளவனாகிய கடவுளைக்கூடக் குழந்தையாகப் பாவித்து நம்முடைய பெருமக்கள் பாடிய (பிள்ளைத்தமிழ், பெரியாழ்வார் பாடல்கள்) பாடல்களில் இத்தகைய ஒர் ஒப்பற்ற அன்பைக் காணலாம. - முற்றிலும் தூய்மை உடையவர்களாயினும், முனிவர்கள், ஒரளவு அகங்காரத்தால் உந்தப்பெற்று, தாம் வேறு, தம்மால் அறியப்பெற்றுத் தம் எதிரேயுள்ள பரம்பொருள் வேறு என்ற இரட்டை பாவத்துடனும், இப் பரம்பொருளைத் தாம் அறிகின்ற அறிவு வேறு என்ற மூன்றாவது பாவத்துடனும் மூன்றாகக் காட்சி யளிக்கின்றனர். அதாவது, கண்ட தாம், காணப்பெற்ற இராமன், காட்சி ஆக மூன்று அங்கே காணக்கிடக்கின்றன. ஆனால், குகனைப் பொறுத்தமட்டில் தான், இராமன், காட்சி என்ற வேறுபாடில்லாமல் இராமன், அவனுடைய பசி என்ற அளவிலேயே குகனுடைய அன்பு பரிணமிக்கின்றது. அறிவின் துணைகொண்டு கானும் பொழுது மூன்றாகக் காட்சியளித்த ஒன்று (காண்பான், காட்சி, காணப்படுபொருள்) உணர்வின் துணைகொண்டு காணும்பொழுது ஒன்றாகவே (காணப்படுபொருள்) காட்சி நல்குகிறது. எல்லையற்ற பக்தி அல்லது அன்பு செய்யும் இரசவாதமாகும் இது. இந்த வேறுபாட்டை நன்கு எடுத்துக் காட்டுவதற்காகவே பரம்பொருள் ஆகிய இராமன் விருத்த மாதவரை நோக்கி முறுவலித்தான் என்று அறிகிறோம். முனிவர், யோகியர் ஒருபுறமிருக்க, இலக்குவன், சீதை ஆகிய இருவருமேகூட ஒரளவு இந்தக் குறைபாட்டைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/92&oldid=770833" இலிருந்து மீள்விக்கப்பட்டது