பக்கம்:கம்பன் கலை.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முறுவலித்தது ஏன்? 83 பெற்றுள்ளனர் போலும் ! தம்பியாகப் பிறந்தும் அடியானைப் போல் ஏவல் செய்கின்ற பேறு தனக்கே உரியது என்று தம்பி ஓரளவு இறுமாந்து நிற்க, இராமனுடைய முழுத் தன்மையையும் அறிந்து அனுபவிக்கின்ற இயல்பு தன்மாட்டே உள்ளது என்று சீதை நினைக்க, இருவரும் குருடர் கண்ட யானைபோல் தத்தம்முடைய அன்பையே பெரிது என மதித்தவர் போலும்! இலக்குவன் இவ்வாறு தன்னைப் பற்றி நினைத்துள்ளான் என்பதைப் பின்னரும் காணுகின்றோம். மாயமான் இலக்குவன் பெயரையிட்டு அழைத்ததைக் கேட்ட சீதை, இராமனுக்குத் துணையாக இலக்குவன் செல்லவேண்டுமென்று கட்டளையிட, இலக்குவன் “கார்எனக் கரியஅக் கமலக் கண்ணனை யார்எனக் கருதிஇவ் இடரின் ஆழ்கின்றீர்?" என்று பேசுகிறான். இதனால், கமலக்கண்ணனைப் பற்றிச் சீதையைக் காட்டிலும் தான் நன்கு அறிந்துள்ளதாக இலக்குவன் கருதுகிறான் என்பது நன்கு வெளிப்படுகிறது. ஆகவே, இந்த இருவருடைய அறியாமையையும் ஒரளவு போக்கவேண்டுமென்று கருதிப் போலும் இராகவன் வேறு ஒரு வழியை மேற்கொள்ளுகிறான். தன் எல்லையற்ற அன்பை வெளிப்படுத்து முறையில் குகன், "ஐய நின்னை இன்னணம் பார்த்த கண்ணை ஈர்கிலாக் கள்வனேன் யான்" என்று பேசுகிறான். இராமனிடம் பழகிய சில நிமிடங்களுக்குள் குகன் இங்ங்னம் பேசுகிறானாகலின், அவன் அன்பின் ஆழத்தை நன்கு அறிந்த இராகவன் சீதை, இலக்குவன் ஆகிய இருவரும் இதனை அறியவேண்டும் என்று கருதுகிறான். அதனால், இராமன் சீதையை நோக்கினான்; தம்பி திருமுகம் நோக்கினான்; ஒரு வினாடி தாமதித்தான்; பின்னர் யாதினும் இனிய தண்ட, இருத்தி எம்மோடு என்று கூறுகிறான். இந்தச் சந்த்ர்ப்பத்தில் குகன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/93&oldid=770834" இலிருந்து மீள்விக்கப்பட்டது