பக்கம்:கம்பன் கலை.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 ல் கம்பன் கலை அறியாதவனல்லன் பரதன். அரச நீதி அதுதான் என்றாலும் தனி மனிதனுடைய அறத்தோடு அது மாறுபடுகின்றதை உணர்கின்றான் அப்பெருமகன். பரதன் என்ற மனிதன், இராமனைத் தாயும், தந்தையும், குருவும் ஆகவும், ஏன் வழிபடு தெய்வமாகவும் வைத்துப் போற்றுகின்றான். எனவே, தன்னுடைய வழிபடு தெய்வமாகிய இராமன் இருந்து ஆட்சி செய்ய வேண்டிய இடத்தில் தான் அமர்ந்து ஆட்சி செய்வது அவன் மனத்தாலும் நினைக்க முடியாத ஒன்று. தனி மனிதன் ஒவ்வொருவனுக்கும் குறிக்கோள் ஒன்று உண்டு. குறிக்கோள் இல்லாத வாழ்க்கை மனித வாழ்க்கை என்ற பெயருக்கே பொருத்தமற்ற ஒன்றாகும். அத்தகைய குறிக்கோளுக்கு என்றேனும் ஒரு நாள் தீங்கு வருமாயின் அன்று உயிரை விட்டேனும் குறிக்கோளை நிலை நிறுத்த வேண்டியது. தனி மனிதனுடைய கடமையாகும். எதனை இழப்பதாயினும் குறிக்கோளை இழப்பது மனிதனுக்கு அடுக்காத செயல். இராமனுக்குத் தீமை நினைத்தல், செய்தல் என்பவை பரதன் என்னும் தனி மனிதன் கனவிலும் கருதமுடியாத கொடிய செயல்கள். எனவே, தனி மனிதனாகத் தன்னைக் கருதிக் கொண்ட பரதன் தனக்கு உரிய அறம் எது என்று ஆய்கின்றான். உடனே தாயும், தந்தையும், வசிட்டனும் தந்த முடியை ஏற்றுக்கொள்ள மறுத்து விடுகின்றான். அரச குமாரனாகிய பரதன், மன்னன் இல்லாமல் தனக்காகக் காத்திருக்கும் நாட்டை ஆள மறுப்பது அரச அறத்திற்கு மாறுபட்டதுதான். எனினும், அந்த அறத்தைப் புறக்கணித்துத் தன்னுடைய தனி அறத்தை நிலை நாட்டுகின்றான் அறத்தின் ஆணியாகிய பரதன். இவைபோன்ற பலவகைத் தனி மனிதர்களுடைய அறங்களையும் விரிவாகப் பேசுகின்றான் கவிஞன். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/98&oldid=770839" இலிருந்து மீள்விக்கப்பட்டது