பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/111

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

105



திருமகள் நாயகன்–லட்சுமி தேவியின் நாயகனாகிய (திருமாலின் அவதாரமாகிய) இராமன் ; தெய்வவாளி (விடுத்த) தெய்வத் தன்மை பொருந்திய அம்பு; வெருவரு–அஞ்சத் தக்க; தாடகை பயந்த வீரர் இருவருள்–தாடகை பெற்ற புதல்வர் இருவருள்; ஒருவனை– ஒருவனாகிய மாரீசனை; கடலில் இட்டது–கடலிலே கொண்டு போட்டது; ஒருவனை–அந்த மற்றொருவனாகிய சுபாகுவை; அந்தகன்புரத்தில் உய்த்தது–எம புரத்துக்குக் கொண்டு போய் சேர்த்தது.

𝑥𝑥𝑥𝑥

பாக்கியம் எனக்கு உனது என
      நினைவுறும் பான்மை
போக்கி நிற்கு இது பொருள் என
      உணர்கிலேன்; புவனம்
ஆக்கி மற்று அவை அனைத்தையும்
      மணி வயிற்றடக்கிக்
காக்கு நீ ஒரு வேள்வி
      காத்தனை எனுங் கருத்தே.

இராமன் திருமாலின் அவதாரமே என்பதை மனத்தில் கொண்ட விசுவாமித்திரர் இராமனைப் புகழ்ந்து கூறுகிறார்.

“பரம் பொருள் நீ. பிரமனாக இருந்து உலகைப் படைப்பவனும் நீயே. ஊழிக் காலத்தில் அவை அழியாமல் உன் வயிற்றில் அடக்கிப் பாதுகாப்பவனும் நீயே.”

“அத்தகைய நீ எனது வேள்வி காத்தாய் என்று உலகோர் எண்ணச் செய்தது வெறும் தோற்றமே. உனக்கு அது ஒரு

14