பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/135

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

129

இவ்வாறு அவள் வந்து நின்ற பொழுது இராமன் அவளை நோக்கினான், அவளும் அவனை நோக்கினாள். இருவர் கண்களும் கலந்தன; ஒன்றையொன்று விழுங்கின; இருவர் உணர்வும் நிலை பெயர்ந்து ஒன்றின.

அண்ணலும் நோக்கினான். அவளும் நோக்கினாள்.

𝑥𝑥𝑥𝑥

எண் அரும் நலத்தினாள் — நினைத்தற்கும் அரிய அழகுடைய சீதை; இனையள் நின்றுழி — இத்தன்மையளாய் நின்ற பொழுது; கண்ணோடு கண் இணை கவ்வி – ஒருவர் கண் இணையோடு இன்னொருவர் கண் இணை கவ்வி; ஒன்றை ஒன்று உண்ணவும்—ஒன்றையொன்று கவர்ந்து அநுபவிக்கவும்; உணர்வும் – இருவர் உணர்ச்சியும்; நிலைபெறாது — ஒரு நிலையில் இராது; ஒன்றிட—ஒன்றையொன்று கூடி ஒன்றாக; அண்ணலும் நோக்கினான்—இராமனும் சீதையைக் கண்டான்; அவளும் நோக்கினாள்—சீதையும் ராமனைப் பார்த்தாள்.

𝑥𝑥𝑥𝑥

ள்ளல் மணத்தை
       மகிழ்ந்தனன் என்றால்
கொள் என முன்பு
       கொடுப்பதை அல்லால்
வெள்ளம் அணைத்தவன்
       வில்லை எடுத்து இப்
பிள்ளை முன் இட்டது
       பேதைமை என்பார்.

ஜனக மன்னன் தன் மகளாகிய சீதையை இராமனுக்கு மணம் முடிக்க விரும்பினால் என்ன செய்திருக்க வேண்டும்.

17