பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8




இமைய வில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக
ஐயிரு தலையின் அரக்கர் கோமான் தொடிப்பொலி
தடக்கையின் கீழ்புகுத்து அம்மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல

மலையிலே வேங்கை மரங்கள் உள்ளன. அவை பூத்துக் குலுங்குகின்றன. அந்த வேங்கை மரத்தைப் பார்க்கிறது மதயானை ஒன்று. என்ன நினைக்கிறது? வேங்கையை நினைக்கிறது. நினைக்கவே சினம் பொங்குகிறது; ஓடி வருகிறது. வேங்கை மரத்தை முட்டுகிறது; முட்டவே என்ன ஆகிறது?

யானையின் கொம்புகள் மரத்திலே பதிந்து விடுகின்றன. மிக்க ஆழமாகப் புதைந்து விடுகின்றன, புதைந்த தந்தங்களை மீட்க இயலாது வருந்துகிறது மதயானை; அரற்றுகிறது; பெருங்குரல் எடுத்து ஓலமிடுகிறது.

இதைக் காண்கிறார் ஒரு கவி. அவருக்கு என்ன நினைவு வருகிறது? இராவணன் நினைவு வருகிறது. இராவணன் என்ன செய்தான்? கயிலையங்கிரியைப் பெயர்க்க விரும்பினான். பத்துத் தலைகள் கொண்ட அந்த இராவணன் தனது இருபது கைகளையும் கயிலையங்கிரி அடியிலே கொடுத்துப் பெயர்க்க முயன்றான், என்ன ஆயிற்று? கை சிக்கியது; எங்கே? மலை அடியிலே, நசுங்கியது; வலி தாங்க முடியவில்லை. அழுதான்; ஓலமிட்டான்.

இது போலிருக்கிறது மதயானை வேங்கை மரத்தை முட்டியது என்று ஒப்பிட்டுக் காட்டுகிறார் கவி. அவர் யார் தெரியுமா ? கபிலர்.

எட்டுத் தொகை நூல்களிலே ஒன்று புறநானூறு என்பது. புறம் பற்றிய பாடல்கள் நானூறு கொண்டது. ஆதலின்