பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20



மகேந்திரவர்மன் சைவ மதத்துக்கு மாறியபின் திருப்பாதிரிப்புலியூரில் இருந்த சமண மடம் ஆதரவு இழந்தது. சமணர்களின் செல்வாக்கும் நாளடைவில் குன்றியது. அதே சமயத்தில் சைவம் ஏற்றம் பெற்றது. பக்தி வெள்ளம் எங்கும் பெருக்கெடுத்து ஓடியது.

நரசிம்ம வர்மன் வைஷ்ணவன் திருமாலிடம் ஈடுபட்டவன்; திருமாலுக்குக் கோயில்கள் பல எடுத்தவன்.

இந்தக்காலத்திலே திருமால் ஈடுபாடு வளரத் தொடங்கியது. திருமங்கை ஆழ்வார் காலமும் இதுவே. அடுத்த இருநூறு ஆண்டுகளில் ஆழ்வார்கள் தோன்றினார்கள், பக்தியைப் பரப்பினார்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்களால் திருமாலைப் போற்றினார்கள்; வணங்கினார்கள். பெருந்தேவனார் தமிழில் பாரதக் கதையைப் பாடினார்.

ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலே தஞ்சைச் சோழர்கள் தலைதூக்கினார்கள். பல்லவ ஆட்சி மங்கியது. தொண்டை நாடு சோழர் வசமாயிற்று

தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டினான் இராசராச சோழன். சிவபாத சேகர் என்னும் பெயர் பெற்றான். இவனுடைய விருப்பத்தின்படி சைவ சமய நூல்களைத் தொகுத்துத் திருமுறைகளாக வழங்கினார் நம்பி ஆண்டார் நம்பி

முதலாவது குலோத்துங்கன் கலிங்க நாட்டின் மீது படை எடுத்தான்; வென்றான். இவ்வெற்றி குறித்து எழுந்த நூலே கலிங்கத்துப்பரணி. ஜெயங்கொண்டார் பாடியது.

பத்தாம் நூற்றாண்டிலே ஆளவந்தார் விரும்பியபடி ஶ்ரீரங்கத்திலே தங்கி ஶ்ரீவைஷ்ணவ தர்மப் பிரசாரம் செய்து வந்தார் இராமாநுசர், அதுபற்றிக் கேள்வியுற்ற சோழ